போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் போரின்போது காயங்களுக்கு உள்ளானவர். இவரது உடலில்யுத்த துகள்கள் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த கடந்த 15 திகதி முன்னால் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்றபோதும் உடலில் ஏற்பட்ட வலி நீங்கவில்லை என்றும் வீடு திரும்பிய நிலையில் தனது வீட்டில் இன்று புதன்கிழமை மீண்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிகவும் வறுமையான நிலையில் குறித்த முன்னாள் போராளியின் குடும்பம் காணப்படுவதாகவும் இவரது தற்கொலை குடும்பத்தை மாத்திரமின்றி அப் பகுதியையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal