தெற்கு அவுஸ்திரேலியாவில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிப்பதற்கான சட்டத்திருந்தங்களை கொண்டுவருவதுதொடர்பான பேச்சுக்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூத்த பாலியல் தொழிலாளர்கள் இருவர் அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு சென்று கிறீன் கட்சியினரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பெண் பாலியல் தொழிலாளர்கள் பல வருடங்களாக பாலியல் தொழிலை மேற்கொண்டவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தாங்கள் பணிபுரிந்த துறையிலுள்ளவர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் செயற்பாட்டாளர்களாக பங்களித்துவருகிறார்கள். அண்மையில் தெற்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கிறீன் கட்சியினரை சந்தித்து அந்த மாநிலத்தில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதில் ...
Read More »செய்திமுரசு
மன்னார் கடற்பரப்பில் எரிவாயு, எண்ணைப் படிமங்கள்!
மன்னார் கடற்பரப்பில் இரண்டு எரிவாயு படிமங்களும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘இரண்டு எரிவாயுப் படிமங்களிலும், 9 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும், இரண்டு எண்ணெய்ப் படிமங்களிலும், 2 பில்லியன் பரல் எண்ணெயும் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு எரிவாயுப் படிமங்களில் சிறியதான டொராடோ படிமத்தில் இருந்து 350 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுயைப் பெற முடியும். இதன் மூலம், 350 ...
Read More »வன்முறையை பரிசளிக்கும் நல்லாட்சி!
நல்லாட்சியின் இலட்சணம், இப்போதைக்கு எமக்கு விளங்கியிருக்க வேண்டும். கடந்த வாரம் புத்தளத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால், பொலிஸாரின் இந்த நடத்தையில் ஆச்சரியப்பட அதிகம் இல்லை. வன்முறையையே பதிலாகக் கொண்ட அரச இயந்திரம், தனது இயலாமையை வேறெவ்வாறு வெளிக்காட்டவியலும்? இன்று, போராடுவதைத் தவிர வழி வேறில்லை என்பதை, நல்லாட்சி தனது கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் காட்டிள்ளது. அது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலையாகட்டும், மாணவர்களது கோரிக்கைகளாகட்டும், புத்தளம் மக்களின் ...
Read More »தன்னிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் இருப்பதாக்க கூறும் பொன்சேகாவும் போர்க் குற்றவாளிதான் !
தன்னிடம் போர்க்குற்ற ஆதரங்கள் இருப்பதாகக்க கூறிவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்த அந்த ஆதாரங்களை வெளிப்படுத்தவோ போர்க்குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பொன்சேகா தயாராக இருக்கமாட்டார் என்றும் அவர் தனது அரசியலுக்காக மட்டுமே இவ்வாறு கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (29) கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர், ...
Read More »லிபிய கடலில் தத்தளித்த 117 சட்டவிரோத அகதிகள் மீட்பு!
லிபியாவின் மேற்கு கடற்பகுதியில் ரப்பர் படகில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட 117 சட்டவிரோத அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர். லிபியாவில் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்து கொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இதேபோல் வன்முறை, உள்நாட்டுப் போர், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ...
Read More »யாழில் கொள்ளையிலீடுபட்டு வந்த இரு இந்தியர்கள் கைது !
பொருள் விற்பனையாளர் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இந்தியப் பிரஜைகளை ஊர்காவற்றுறை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். ஊர்காவற்றுறைப்காவல் துறை பிரிவிற்குட்பட்ட கரம்பன், நாரந்தனைப் பகுதிகளில் அண்மைக்காலமாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக காவல் துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது. இதையடுத்து மண்டைதீவு காவல் துறை சோதனைச்சாவடியில் பாதுகாப்பினை காவல் துறையினர் பலப்படுத்தினர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (27) மாலை கரம்பன் மற்றும் நாராந்தனை பகுதிகளில் பொருள் விற்பனைக்காக சென்ற சந்தேகநபர்கள் இருவரும், வீடுகளில் தனித்திருந்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து தப்பி ...
Read More »யாழ். மாவட்டத்தில் 50 மாணவிகளுக்கு “ 9 ஏ ” சித்தி!
கல்வித் பொதுத்தர சாதாரண பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று வேம்படி மகளீர் கல்லூரி முதலிடத்தை பிடித்துக் கொண்டது. பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியது. அந்த முடிவுகளின் படி யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தியையும், 42 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக் கொண்டனர். கொக்குவில் இந்து கல்லூரியில் 8 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும்,13 மாணவர்கள் 8 ஏ சித்திகளையும் பெற்றுக்கொண்டனர். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் 5 ...
Read More »சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகை- விமானங்கள் தரையிறக்கம்!
சிட்னி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் திடீரென தரையிறக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை, கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கட்டுப்பாட்டு கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் பணிகள், மெல்போர்னில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. வெளியில் இருந்து வந்த ...
Read More »அவுஸ்திரேலிய மனைவியை 10 முறை கத்தியால் குத்தி கொலைசெய்தவருக்கு கிடைத்த தண்டனை!
அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலைசெய்த இந்திய நபருக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆண்களா பெண்களா மேன்மையானவர்கள் என்று நண்பர்களுடன் இடம்பெற்ற வாதத்தின்போது தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இந்த வாதத்தினால் கடுங்கோபமடைந்து சமையலறையில் போய் கத்தியை எடுத்துவந்து அவரை பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் குத்திக்கொலை செய்த இந்திய நபருக்கு விக்டோரிய உயர்நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த Douglas Derick Eustace என்ற 44 வயது நபருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படுகொலை சம்பவம் மெல்பேர்ன் Hallam ...
Read More »தமிழ்க் கட்சிகளுக்கு ஆதாயம்; தமிழ் மக்களுக்குச் சேதாரம்!
போட்டிபோட்டுக் கொண்டு அலைபேசிக் கம்பனிகள் வெகுமதிகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அநேக மக்கள் அது குறித்து ஆர்வம் இல்லாது இருக்கின்றார்கள். அதைப்போலத்தான் சேதாரங்களை நினைத்தே, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கும் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் இருக்கிறார்கள். பொதுவாகவே, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்பதில் நாம் எல்லோரும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், பதில்களைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமங்களை எதிர் கொள்கிறோம். தமிழ் மக்களின் அரசியலில், பொதுவானதும் முக்கியமானதுமான பிரச்சினைகளிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லையென்றால், என்ன செய்வது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. ...
Read More »