தன்னிடம் போர்க்குற்ற ஆதரங்கள் இருப்பதாகக்க கூறிவரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் போர்க்குற்றவாளியே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அந்த அந்த ஆதாரங்களை வெளிப்படுத்தவோ போர்க்குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பொன்சேகா தயாராக இருக்கமாட்டார் என்றும் அவர் தனது அரசியலுக்காக மட்டுமே இவ்வாறு கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (29) கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,
இலங்கை நாட்டின் ஐனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச மற்றும் எதிர்த் தரப்பினர்கள் இந்த நாட்டில் விசாரணைகளை நடாத்தப் போவதில்லை என்று கூறுகின்றனர். அதே நேரம் முன்னாள் இரர்னுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னிடம் யுத்தக் குற்ற ஆதாரங்கள் இருப்பதாகவும் விசாரணைகளை நடாத்தப்பட வேண்டுமென்றும் கூறுகின்றார். ஆனாலும் போர்க் குற்றம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடாத்த பொன்சேகா தயாராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.
ஏனெனில் நடைபெற்ற காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவரே அவர் தான். ஆகையினால் அவ்வாறானதொரு விசாரணைகளுக்கு அவர் ஒருபொதும் ஒத்துழைக்கப் போவதில்லை. ஆனாலும் அந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் சர்த் பொன்சேகாவும் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுவார். ஆக அவரும் உண்மையில் அத்தகைய விசாரணைகளைக் கோரவோ அல்லது அதற்கு ஒத்துழைக்கவோ போவதில்லை. அனாலும் அவர் தன்னை பரிசுத்தமானவராகக் காட்டுவதற்கு முனைகின்றார் என்றார்.
Eelamurasu Australia Online News Portal