12 ஆண்டுகளாக பெப்சி குழும நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் ...
Read More »செய்திமுரசு
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்!
யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, ‘தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும். ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள். அவர்களிலும் 5 பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின்னர் புற்றுநோய் வைத்தியசாலையில் 4 வைத்தியர்களே கடமையாற்றவுள்ளனர். ...
Read More »சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்!
எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர கட்சியின் முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Read More »வடக்குத் தொடர்பாக பிறந்த திடீர் ஞானம்!
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அரசியல் தலைவர்களுக்குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்களை வியக்க வைத்துள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் இடம்பெற்ற நோயாளர் காவு வண்டியின் இலவச சேவைக்கான ஆரம்ப நிகழ்வின்போது இதை அவதானிக்க முடிந்தது. இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது வட பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றதாகத் தெரியவில்லையெனக் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் காணொலி மூலமாக உரையாற்றிய இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, வட பகுதி மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை வளமான எதிர்காலத்துக்கு இந்தியா ...
Read More »கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மழைக்காலம்!
கிழக்கு ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது இந்த மழைக்காலம். மழை, மழையிலிருந்து புறப்படும் மண்வாசம், அந்த மண்வாசம் தரும் நினைவுகள் என எதுவும் இவ்வாண்டு கிழக்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு கோடை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வறட்சியானது மிக மோசமாக வேளாண் பண்ணைகளை பாதித்து இருக்கிறது. வானிலிருந்து ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேவிட் கிரே எடுத்திருக்கும் புகைப்படமானது இந்த வறட்சியின் பாதிப்பை அதே அடர்த்தியில் நமக்கு உணர்த்துகிறது. அந்த புகைப்படங்களை இங்கே இங்கு ...
Read More »அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை!
அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்ற விவகாரம் தொடர்பில் ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சையின் பின் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
Read More »பொருளாதார தடைக்கு ஒருநாள் முன்னதாக 5 புதிய விமானங்களை வாங்கிய ஈரான்!
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக 5 புதிய விமாங்களை ஈரான் வாங்கியுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் கூட்டு நிறுவனமான ஏடிஆர் உடன் 72-600 ...
Read More »வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து அதனை போர்ப் பாதிப்பு குழப்பியுள்ளது!
கல்வி கற்பித்தலில், வடக்குக்கென ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், போர்க்காலமும் போர்ப் பாதிப்பும் அதனைக் குழப்பிவிட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். ஆனால், வடமாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துகொண்டு செல்ல வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணிபுரிவதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று (05) நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முதலமைச்சர், “கல்வி தான் எமது ஒரேயொரு ...
Read More »சம்பந்தனினதும் மாவையினதும் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, தேசத்ரோகக் குற்றத்துக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார். அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மிகக் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார். அத்தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை, தமிழரசுக் ...
Read More »இறுதி வாக்குமூலத்தை சுமந்து வரும் ஈழத்தின் புதை குழிகளும், எலும்புக் கூடுகளும்!
1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியபோது ஊர் பாக்கவும் பஞ்சத்தில் வயிறு வளர்க்கவும் கிளிநொச்சிக்கு வந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்று புதைத்தது. மிகவும் கொடூரமாக அவர்கள் சித்திரவதை புரிந்து கொல்லப்பட்டார்கள். அதில் காயங்களுடன் இராணுவத்தினரிடமிருந்து சாதுரியமாக தப்பியவர்களும் உண்டு. திரும்பி வருவார் என்று ஊருக்குச் சென்றவர்கள் பலரும் காணாமல் போயினர். இதன் விளைவாக 2000ஆம் ஆண்டில் ஆனையிறவு மீட்புடன் கிளிநொச்சி திரும்பியபோது பலரது வீட்டு கிணறுகளிலும் மலசல கூடங்களிலும் எலும்புக்கூடுகளே காத்திருந்தன. அந்தக் காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. கந்தபுரம் தமிழீழ காவல்துறை அலுவலகத்தில் ...
Read More »