செய்திமுரசு

சென்னை துறைமுகத்தில் அவுஸ்ரேலிய போர்க்கப்பல் பாதுகாப்பு பயிற்சி

சென்னை துறைமுகத்துக்கு வந்த அவுஸ்ரேலிய போர்க்கப்பலுக்கு இந்திய கடலோர காவல் படை சார்பில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவுஸ்ரேலிய நாட்டு கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ‘ஏ.பி.எப்.சி. ஓ‌ஷன் ஷீல்டு’ நவீன ரக போர்க்கப்பல் சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு நேற்று (18) வந்தது. இந்த கப்பல் கடலோர பாதுகாப்புக்காக ரூமேனியா நாட்டில் கட்டப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 8500 டன் எடை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 8 ஆம் ஆண்டு எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் பரந்து வாழுகின்ற உணர்வுள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.

Read More »

பளையில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – இராணுவம் சுற்றிவளைப்பு

பளைப்பகுதியில் பொலிஸார்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இராணுவம் குவிப்பு சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது . இன்று(19) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதிகாலை 3:30 மணியளவில் ரோந்தில் ஈடுபட்ட பளை பொலீசார் மீது பளை கச்சாய் வேலி பகுதியில் பொலீசாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இனந்தெரியாத நபர்களினால் மறைவான இடம் ஒன்றில் இருந்து இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து சென்ற பொலீசாரின் வாகனம் சிறு சேதமடைந்த ...

Read More »

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: அவுஸ்ரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோனிஸ்

தோள்பட்டை காயம் குணமடைந்து உடல் தகுதியை எட்டி இருக்கும் அவுஸ்ரேலியாவை சேர்ந்த 27 வயதான ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடுவார் என்று தெரிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அவுஸ்ரேலியாவை சேர்ந்த 27 வயதான ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த போட்டி தொடரின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாடு திரும்பினார். இதனால் இங்கிலாந்தில் ஜூன் 1-ந் திகதி தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அவுஸ்ரேலிய  அணியில் ...

Read More »

“இணைந்ததே சிறந்தது”-சிறீலங்காவில் அவுஸ்ரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி!

எதிர்காலத்தில் சிறீலங்காவில் அவுஸ்ரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் பற்றி நான் நேற்று(17) ஆரம்பித்து வைத்துள்ள “இணைந்ததே சிறந்தது” எனும் புகைப்படக்   கண்காட்சி விபரிக்கின்றதென  சிறீலங்காவின்  அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் தெரிவித்தார். அவுஸ்ரேலியா மற்றும் சிறீலங்காவிற்கிடையிலான 70 வருடகால அபிவிருத்திக் கூட்டுறவைக் கொண்டாடும் வகையில், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ‘இணைந்ததே சிறந்தது’ புகைப்படக் கண்காட்சியை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதேசிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த 7 தசாப்த காலத்தில், சிறீலங்காவின்  கிழக்குப் பிராந்தியம் ...

Read More »

மெல்பேர்ண் நகரில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது.   Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ரகுராம் அவர்கள். பக்க வாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த வைத்திய கலாநிதி சிறீ பத்ரி அவர்களும், ...

Read More »

அவுஸ்ரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் மிகப்பெரிய கப்பல் திருகோணமலையில்

அவுஸ்ரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவின் மிகப்பெரிய கப்பலான ஓசியன் சீல்ட்  நேற்று (17) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டே இந்தகப்பல் திருகோணமலை சென்றுள்ளது. சிறந்த உறவு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் இணைந்து செயற்படும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தக்கப்பலின் பயணம் அமைந்துள்ளதாக அந்த நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கப்பலுக்கு தலைமை தாங்கி வந்துள்ள எயார் மார்சல் ஒஸ்போர்ன் கருத்து வெளியிடுகையில் அவுஸ்ரேலிய எல்லைப்பாதுகாப்பு படையினர் எப்போதும் இல்லாத வகையில் பலத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் அவுஸ்ரேலியாவுக்குள் ...

Read More »

தமிழர் இனவழிப்பு நினைவு நாள்!- பேர்த் 2017

நாளை வியாழக்கிழமை 18.05.2015 மாலை 7.15 தொடக்கம் 8.30 மணிவரை 12 Mandogalup Road, Mandogalup WA 6167 என்ற முகவரியில் உள்ள பேர்த் ஸ்ரீ பாலமுருகன் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெறும்.

Read More »

மே18 – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது. • கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும். • வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் (ஏ32வீதியில் 46வது கிலோ மீற்றர் கல்லிலிருந்து புனித சின்னப்பர் ஆலய வீதி) பி.ப 2.30 மணிக்கு நடைபெறும். ...

Read More »

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த இருவிடயங்களையும் அரசு கருத்தில் கொண்டு, எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க வேண்டும் என இன்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது, ‘சேயாவிற்கு ஒரு நீதி, வித்தியாவிற்கு ஒரு நீதியா?’, ‘காவுகொள்ளப்பட்ட எம் ...

Read More »