செய்திமுரசு

விடாமல் தொடர்ந்து சண்டை போட்ட பாம்புகள் !

அவுஸ்திரேலியாவின் Coroy பகுதியில் இரண்டு பாம்புகள் விடாமல் தொடர்ந்து பத்து நிமிடங்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு கட்டடத்தின் 3வது மாடியில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் விடாமல் சண்டையிடுகின்றன. Gillian Bradley என்பவர் தன் வீட்டில் இருந்து இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளார்.

Read More »

103 வயதிலும் விவசாயம் செய்து வரும் மூதாட்டி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்கிற ரங்கம்மாள் (வயது 103). இவர் 1914-ம் ஆண்டு தேவனாபுரம் கிராமத்தில் பிறந்தார். தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து விட்டார். இவருடைய பாட்டி இவரையும் இரு சகோதரிகளையும் தேக்கம்பட்டி அழைத்துவந்து அங்கு மளிகை கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பாட்டி இறந்த பிறகு மளிகை கடையை பாப்பம்மாள் எடுத்து நடத்த தொடங்கினார். இதே கிராமத்தில் ஓட்டலும் வைத்துள்ளார். சிறுக, சிறுக சேர்க்கப்பட்ட பணத்தில் தேக்கம்பட்டி கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் பல்வேறு காலகட்டங்களில் புகலிடம் கோரிய, 9 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில் பேர்த் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். நேற்று இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை அடுத்து, அவுஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 9 பேரும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்த 9 பேரையும் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ...

Read More »

வடக்கு கிழக்கில் பொது வாக்ககெடுப்பு நடத்துமாறு கோரிய பிரேரணை!

சிறிலங்காவை  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையின் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 131வது அமர்வு ​நேற்று (11) கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. இதன்போது, கடந்த அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் ...

Read More »

7 பேர் விடுதலை சாத்தியம் ஆகுமா?” என்ன சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்?

28 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 7 பேர் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும் ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் ...

Read More »

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டனர்!

புகலிடம் கோரி அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்த 9 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் இன்று காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். இவர்களுடன் அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் அந்த விமானத்தில் வந்துள்ளனர். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த அதிகாரிகள் இவர்களை விமான நிலையக் குற்றப்புனாய்வுப் பிரிவினரிடம் ...

Read More »

யாழில் ஆயுதங்களுடன் கடத்தப்பட்டது காவல் துறையினரின்வாகனம்!

கொடிகாமம் காவல் துறைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் காவல் துறையினரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, காவல் துறையினர் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர். சம்பவத்தையடுத்து பெருமளவு காவல் துறையினர் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...

Read More »

விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு காத்திருக்கும் சவால்!

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு பெரியளவில் திருப்பங்களைத் தரும் என்றோ, இனிமேலும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் நீடிப்பார் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றாகி விட்டது.  விக்னேஸ்வரன் ஒரு பாரம்பரிய அரசியல்வாதி அல்ல. அதுதான் அவருக்குள்ள பிரதான சிக்கல். இதுவரையில் எந்தவொரு தேர்தலுக்கும் அவர் வியூகம் வகுத்தவர் அல்ல.  தேர்தல் ஒன்றில் கூட்டணிக் கட்சிகளை எப்படி வளைத்துப் போடுவது, எப்படி வெட்டி விடுவது, எப்படி ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பது, எப்படி பிரசார வியூகங்களை வகுப்பது என்பதையெல்லாம், எல்லோராலும் இலகுவாக செய்து விட முடியாது தமிழ்த் தேசியக் ...

Read More »

சிறிலங்காவில் மரண தண்டனை கவலையளிக்கறது!

சிறிலங்காவில்  மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் வருத்தம்  தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39வது கூட்டத்தொடர் சுவிஸ்சலாந்தின், ஜெனீவாவில் நேற்று  ஆரம்பமானது. அதில் உரை நிகழ்த்திய போதே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்தல் மற்றும் அதன் செயற்பாடுகள் சம்பந்தமாக திருப்தியடைவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கை ...

Read More »

முப்படைகளின் அலுவலக பிரதானி விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு…!

முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை ...

Read More »