அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள் மாத்திரமே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அவர்களில் 43 பேர் நவுறு தீவிலும், 15 பேர் பப்புவா நியுகினியிலும் உள்ளனர். அதேநேரம் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்கின்ற எந்த நபரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு படகு மூலம் பிரவேசிக்கின்ற இலங்கையர்கள், ...
Read More »செய்திமுரசு
குண்டுத் தாக்குதல் -அமெரிக்காவில் வழக்குகள் தொடுக்கக்கூடிய சாத்தியம்!
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக அமெரிக்கா சட்டநடவடிக்கை எடுக்க கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த தாக்குதல்களில் அமெரிக்க பிரஜைகளும் கொல்லப்பட்டதினால் அமெரிக்கா அதன் நீதிமன்றமொன்றில் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க கூடும் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று தங்களது பிரஜைகளை பலிக்கொடுத்த மற்றைய நாடுகளும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, இந்தியா போன்றவை வழக்குகளை தொடுக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் ...
Read More »வில்பத்துவில் கடற்படை முகாம் நீக்கப்படவில்லை!
வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும், நாட்டுக்குள் அசாதாரண நிலைமைகள் தோன்றக் கூடியதான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடற்படையின் முகாம் ஒன்று வில்பத்து பகுதியில் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் தகவல் தவறானது. இப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் முகாம் அல்ல. இது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும். இந்த நிலத்தில் தேசிய உணவு ...
Read More »பெனாசிர் புட்டோவின் கணவர் கைது!
போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி. ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது ...
Read More »ஆஸ்திரேலிய பெண் சுட்டுக்கொலை – அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறை!
ஆஸ்திரேலிய பெண்ணை சுட்டுக்கொன்றது தொடர்பாக அமெரிக்க காவல் துறை அதிகாரிக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர், முகமது நூர். இவர் மினியா போலிஸ் நகரில் 2017-ம் ஆண்டு, ஜூலை மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை நோக்கி வந்த ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட் என்ற ஆஸ்திரேலிய பெண்ணை அவர் சுட்டுக்கொன்று விட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஸ்டின் ரூஸ்சைக் டாமண்ட், தனது வீட்டின் பின்புறம் நடந்த ...
Read More »முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா?
யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். ;நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு ; என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் ...
Read More »சிங்கள தலைவர்கள் அந்த ஒப்பந்தகளை மதித்து செயற்படவில்லை!
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இந்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை தொடர்பில் ...
Read More »மல்லையா: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை கண்டுகளித்தார்!
ரூ. 9,000 கோடி கடன் பெற்று இங்கிலாந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையா இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வந்துள்ளார். இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் அனுமதி வழங்கினார். இதனை எதிர்த்து விஜய் மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த ...
Read More »தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மணலாறு ஆமையன் குளம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான மணலாறு பகுதி வெலிஒயா என பெயர் சூட்டப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பறிக்ப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலின் செயற்பாடுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன . 1984 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் திருகோணமலை எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பெரும்பான்மையினத்திவர்களால் விரட்டியடிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களும் காணிகளும் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா எனும் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டு ...
Read More »சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்!
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. பயங்கரவாதி குண்டு வெடிக்க வைத்த தற்காக சாதாரண முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது எவ்விதத்தில் நியாயமாகும். முஸ்லிம் மக்களை தாக்கி அவர்களது சொத்துக்களை அழித்தவர்களை கைது செய்து உடனடியாக விடுவித்துள்ள போது அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும். எனவே சமூகத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசாங்கம் செவிசாய்க்கா விடின் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு செயற்படுவோம் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ...
Read More »