திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. பயங்கரவாதி குண்டு வெடிக்க வைத்த தற்காக சாதாரண முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது எவ்விதத்தில் நியாயமாகும். முஸ்லிம் மக்களை தாக்கி அவர்களது சொத்துக்களை அழித்தவர்களை கைது செய்து உடனடியாக விடுவித்துள்ள போது அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்.
எனவே சமூகத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசாங்கம் செவிசாய்க்கா விடின் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு செயற்படுவோம் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இஸ்லாத்தில் அடிப்படைவாதம் என்று ஒன்றில்லை. அதே போன்று தௌஹீத்தை மறுத்தால் அவன் முஸ்லிமே இல்ைல. ஆகவே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தௌஹீத்கள் தான். எனவே தவறான புரிதல்களை சீர் செய்ய வேண்டியுள்ளது என வும் அவர் குறிப்பிட்டார்.
வீரகேசரி நாளிதழுக்கு எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அந்த செவ்வி பின்வருமாறு,
கேள்வி: உங்களது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்த முடியுமா? சுயமாக விலகினீர்களா? அல்லது விலக்கப்பட்டீர்களா?
பதில்: நாங்கள் விலகினோம். ஆனால் உண்மையாகவே விலக்கப்பட்டோம். பதவியை விட்டு விலகும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை. நாடளாவிய ரீதியில் முஸ் லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பெற்றோல் வாங்கி முஸ்லிம்களை தாக்குவதற்கு தயாராவதாகத் தொலைபேசி அழைப்புகள் மூலம் தகவல்கள் கிடைத்தன. கடும்போக்கான சிங்களவர்கள் வெலிகம, கண்டி, குருநாகல், அம்பந்தோட்டை, காலி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் கடைகளை மூடுமாறு அச்சுறுத்தி தாக்கியுள்ளனர்.
வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தினர். மறுநாள் 12 மணிக்கு கொலை செய்வோம் என்று கடுமையாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்தினார்கள். ஆகவே நாங்கள் மிகவும் நிதானமாக பொறுமையுடன் நடப்பவை குறித்து அவதானித்தோம். பெரும்பாலான இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நிட்டம்புவ, – திஹாரிய பகுதியில் ஊர்வலம் சென்று தாக்குதல்கள் நடத்தினார்கள்.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் தலைவர்களும் கலந்துரையாடினோம். நான் பதவி விலகுவது அல்ல பிரச்சனை. ஒரு பௌத்த குருவின் கோரிக்கைக்கு அடிபணிந்து பதவி விலகுவது முஸ்லிம் சமூகத்துக்கு சிறந்ததாக அமையாது. ஆகவே இதனை வழக்கமாக்கி விடக் கூடாது. நாளைக்கு மற்றுமொரு விடயத்தை வலியுறுத்தியும் இவ்வாறு செயற்படக் கூடும். ஆகவே இதற்கு அடிபணிந்து விடக்கூடாது என்பதே எமது ஆரம்ப நிலைப்பாடாக இருந்தது.
எவ்வாறாயினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படாத நிலையில் மீண்டும் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகத்துடன் தொடர்புடைய முஸ்லிம்கள் என பலரும் கூடி கலந்துரையாடினோம். இதன்போதுதான் பதவி விலகுவது குறித்து தீர்மானித்தோம். ஏனெனில் நாங்கள் பதவி விலகியிருக்காவிடின் அன்று சாதாரண முஸ்லிம் மக்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்க்கொண்டிருப்பார்கள்.
ஞானசார தேரரின் அறிவு அவ்வளவு தான். கடும் நிபந்தனையில் விடுவிக் கப்பட்டுள்ள போதிலும், கொலை செய் வோம், அனைத்து முஸ்லிம் வீடுகளிலும் மரணங்கள் ஏற்படும் என ஒரு சமூகத்துக்கு எதிராகப் பகிரங்கமாக அச்சுறுத்த விடுத்தார். இவரைக் கைது செய்வதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்பட வில்லை. அதே போன்று வன்முறைகளிலிருந்து பாதுகாக்க எந்தவொரு முஸ்லிம் கிராமங்களிலும் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்பிற்காக இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராமங்களிலும் வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாகவே செயற்பட்டனர். ஆகவே முஸ்லிம் சமூகத்துக்கு அழிவு ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு நான் காரணமாகி விடக் கூடாது என்று தீர்மானித்தேன்.
அதேபோன்று பிரதமரைச் சந்தித்த பின்னர் முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்தார்கள். முஸ்லிம் சமூகம் அன்றைய தினம் எதிர்கொண்டிருந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க நாம் பதவி விலகுவதே ஒரு வழியாகவும் காணப்பட்டது.
கேள்வி: ஆளுநராகப் பதவி வகித்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டு அந்த மக்களின் பாதுகப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பதில்: ஜனாதிபதியிடம் பல முறை குறிப்பிட்டேன். முஸ்லிம்களுக்கு எதிராக அச்சுறுத்தல் மேலோங்கிய போது, ஜனாதிபதியை நேரடியாக அவரது வீட்டில் வைத்து சந்தித்து 45 நிமிடம் வரை பேசினேன். முஸ் லிம் சமூகத்தின் பிரச்சினையை தெளிவுபடுத்தினேன். பதவி விலக மாட்டேன் என்று கூறினேன். நீங்கள் ராஜினாமா செய்யுங்கள் என்று என்னிடம் ஜனாதிபதி கூறினார். ராஜினாமா செய்யா விடினும் பாரிய பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும். கடைகளை எரித்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார். அவசரகால சட்டத்தின் கீழ் அவ்வாறு ஒருவர் உண்ணாவிரதம் இருக்க முடியாது. தேரரை அப்புறப்படுத்துங்கள். பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்தி தேரரை அங்கிருந்து அப்புறப்படுத்துங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். இதனை செய் யாது எம்மைப் பதிவியிலிருந்து விலக்குமாறு கூறுவதில் என்ன நியாயம் என் பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தி னேன். ஆனால் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை.
கேள்வி: முஸ்லிம்களை பாதுகாக்கும் விடயத்தில் ஜனாதிபதியின் நடவடிக்கைள் திருப்தியளிக்க வில்லை என்றா கூறுகின்றீர்கள் ?
பதில்: பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதி உறுதியாக செயற்படவில்லை. எங்களை ராஜினாமா செய்ய வைக்காது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாட்டை செய்திருக்க வேண்டும். இனவாதம் பேசி நாட்டையே ஒரு அச்சத்திற்குள் கொண்டு வந்த ஞானசார தேரரை உடன் கைது செய்திருக்க வேண்டும். அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தை ஜனாதிபதி தடை செய்திருக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இது எதனையும் செய்ய வில்லை.
கேள்வி: முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலான நிலைமையே தற்போது காணப்படுகின்றது. இந்நிலையில் சமூகத்தின் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவீர்கள்?
பதில்: முஸ்லிம்கள் பதவிகளுக்கு அடிபணிந்தவர்கள் என்று நாட்டில் தவறான கருத்தியல் காணப்பட்டது. ஆகவே முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட மாட்டார்கள் என்ற நிலைப்பாடும் காணப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. பதவிகளைத் துறந்து அனைவரும் ஒற்றுமைப்பட்டுள்ளோம். தற் போதுள்ள பிரச்சினைகளை தனித்தனியே அடையாளம் காண்கின்றோம். எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் சுமார் 2 ஆயிரம் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுல் உலமாக்களும் உள்ளடங்குகின்றனர். இதில் 89 பேர் வரை தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அரசாங்கமே கூறுகின்றது. இவர்களை விடுதலை செய்யுமாறு நாம் கோரிக்கை விடுக்க மாட்டோம். ஆனால் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான மக்கள் அறிக்கை உள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது.
ஆனால் அரசாங்கம் ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையினை காட்டுகின்றது. ஆகவே எஞ்சியவர்கள் எங்கே என்ற கேள்வி எழுகின்றது. அரசாங்கத்தி ற்கு அறிவிக்காது வெறுமனே பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. குர்ஆன், தொழுகை அச்சிட்ட பிளாஸ்டிக் அட்டைகள் வைத்திருந்ததற்காகவும் பெரும் தொகையானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவூதியால் வழங்கப்பட்ட மௌலவி ஆடையை வைத்திருந்ததற்காக மல்வானையில் இரண்டு மௌலவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று மஹியங்கனையில் ஆடையில் தர்ம சக்கரம் இருப்பதாகக் கூறி கைது செய்தார்கள்.
குழப்பங்களை செய்த 400 பேரை விடுவித்துள்ளனர். இவற்றை திட்டமிட்டு செய்யும் அநியாயம் என்பதை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம். எனவே நாளையிலிருந்து நாங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக செயற்பட உள் ளோம். முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் இதற்கான ஒத்துழைப்புகளை வழங்க உள்ளது. சிறைகளுக்கு சென்று பார்வையிட்டு உண்மையான எண்ணிக்கைளை கண்டறிவோம். கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். தேவைப்படின் சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வோம். கைதாகியுள்ள முஸ்லிம்களுக்கு சில பொலிஸ் நிலையங்களில் மிகவும் மோச மான நிலையே காணப்படுகின்றது. அவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வோம்.
அதே போன்று முஸ்லிம்களின் ஆடை சம்மந்தமாக பொது நிர்வாக அமைச்சு சுற்றுநிரூபம் வெளியிட்டுள்ளது. இந்த விட யத்திலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நம்பகமற்ற வேறுபட்ட கருத்துக்களையே முன்வைக்கின்றனர். இந்த விடயத்தை எளிதில் விட மாட்டோம். ஜனநாயக ரீதி யாக போராடுவோம். முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம். பதவிகளைப் பெறும் நோக்கம் இனி எமக்கில்லை. சமூகத்திற்காகவே பதவிகளை பெற்றுக்கொண்டோம்.
கேள்வி: இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் காணப்படுவதாக கூறப்படுகின்றது. அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: இஸ்லாத்தில் அடிப்படைவாதம் என்று ஒன்றில்லை. வஹாபிசம் என்ற அது அடிப்படைவாதமும் அல்ல. அவ்வாறான கொள்கையும் கிடையாது. சுஹுபிசம் இருக்கு வஹாபிசம் என்று உலகத்தில் கொள்கை ஒன்று கிடையாது. அப்துல் வஹாப் என்ற ஒருவர் மார்க்கத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்ததற்காக அந்த முறையை தான் அவ்வாறு சொல்கின்றனர். ஆனால் அதுவொரு கொள்கையல்ல.
சூபிசம், ஷியா, சுன்னி என்று முறைகள் உள்ளன. வஹாபிசம் என்று ஒன்றில்லை. முஸ்லிம்களை பிளவுப்படுத்துவதற்காக செய்யும் வேலைகளாகவே காணப்படுகின்றது. பெண்கள் முகத்தை மூடுவது என்பது அடிப்படைவாதம் அல்ல. அது மார்க்கமாகும். ஒரு காலத்தில் அவ்வாறானதொரு தேவை மார்க்கத்தில் காணப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை தற்போது இலங்கையில் இல்லை. வீதியில் பெண்கள் சென்றால் கடத்தும் நிலைமையே தற்போது காணப்படுகின்றது. ஹபாயா மார்க்கத்தின் ஒரு பகுதி. 10 வருடத்துக்கு முன்பு ஹபாயா போடவில்லை என்பதற்காக மார்க்கத்துக்கு உள்வாங்கக் கூடாது என்றில்லை.
பயங்கரவாதம் என்பது வேறு. அடிப்படைவாதம் என்பது வேறு. பயங்கரவாதம் காணப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். அதற்காக எல் லோரையும் சந்தேகப்பட முடியாது. தௌ ஹீத் என்பது மார்க்கம். அதனை முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆட்களை வெட்டுவதோ, குண்டு வைப் பதோ தௌஹீத் அல்ல. தௌஹீத் ஜமாஅத் என்று பெயரை வைத்துக்கொண்டு ஒரு வன் குண்டை வெடிக்க வைத்ததற்காக தௌஹீத் பிழையல்ல. தௌஹீத் என்றால் ஏகத்துவம். ஒரே இறைவன் என்ற ஏகத்துவம். இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. தௌஹீத்தை மறுத்தால் அவன் முஸ்லிமே இல்ைல. ஆகவே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தௌஹீத்கள் தான்.
அதே போன்று தான் ஷரியா குறித்தும் தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றது. ஷரியா என்பது மார்க்கம். மார்க்கத்தை படிப்பது ஷரியா. இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஷரியாவை படித்துள்ளார்கள். ஷரியாவை படிக்காது எவ்வாறு இஸ்லாத்தில் வாழ முடியும்? இதே போன்று தான் பௌத்தர்களும் அவர்களது மார்க்கத்தை படிக்க வேண்டும். இந்துக்கள், கிறிஸ்தவர்களும் அவர்களது மதத்தை படிக்க வேண்டும். அவ்வாறு அல் லது எந்தவொரு மார்க்கத்தையும் பின்பற்ற இயலாது. கழிவறை தொடக்கம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் வரையில் அனைத்தும் ஷரியாவில் கூறப்பட்டுள்ளன.
அறியாமையினாலேயே பல பிரச்சினை கள் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றை தெளிவுபடுத்த உள்ளோம்.
கேள்வி: மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஷரியா பல்கலைக்கழகமா?
பதில்: அங்கே எந்தவொரு ஷரியாவும் கற்றுக் கொடுக்கப்படமாட்டாது. ஷரி யாவை கற்றுக்கொடுக்க இலங்கையில் 350 அரபுக் கல்லூரிகள் உள்ளன. எனவே மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து தவறான கருத்துக்களே பரப்பப்படுகின்றன. குர்ஆன் மத்ரசாக்களை தவிர்த்து 350 அரபுக் கல்லூரிகள் காணப்படுகின்றன. இவை அனைத்து முஸ்லிம் விவகார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகமாகும். பொறியியல், கட்டட நிர்மாணத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பட்டப்படிப்புகளை வழங்க சகல சமூகங்களுக்குமான பல்கலைக்கழகமா கவே கட்டப்படுகின்றது.
கேள்வி: தேசிய தௌஹீத் ஜமாஅத் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை சஹ்ரான் என்ற நபரே உருவாக்கினார். ஆனால் 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் சஹ்ரான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி விட்டார். அவ்வாறு விலகிய சஹ்ரான் இயக்கிய குழுதான் வெடிக்குண்டுகளை வெடிக்க வைத்தது. இதனால் தான் இன்று முஸ்லிம் சமூகம் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
கேள்வி: சஹ்ரானின் நடவடிக்கைகள் குறி த்து நீங்கள் அறிந்திருக்க வில்லையா ?
பதில்: ஆரம்பத்திலிருந்தே சஹ்ரானின் நடவடிக்கைகள் மொத்த சமூகத்தையும் பாதித்தது. சஹ்ரானினால் காத்தான்குடியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது நான். ஒவ்வொரு தேர்தல்களிலும் என்னை எதிர்த்து மார்க்கத்துக்கு முரணானவன் என்று பிரசாரம் செய்வான். 2015ஆம் ஆண்டில் மிகவும் மோசமாக எனக்கு எதி ராக செயற்பட்டான். பள்ளிவாயல்கள் ஊடாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நாங்கள் செய்வதில்லை. ஆனால் சஹ்ரான் தௌஹீத் பள்ளிவாயல்களில் மிக மோசமாக எம்மைச் சாடி அரசியல் பிரசாரம் செய்வான். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கூட அனைவரையும் அழைத்துப் பேசினான். பலரின் வேண்டு கோளுக்கு இணங்க நானும் சென்று சந்தித் தேன். அவனுடைய கொள்கையுடன் ஒத்துப்போக முடியவில்லை. வெறும் 51 வாக்குகளால் தோல்வியடைந்தேன். காத்தான் குடியில் மாத்திரம் 2 ஆயிரம் வாக்குகளை சஹ்ரான் இல்லாது ஆக்கினான். தேசிய பட்டியலில் என்னை ஜனாதிபதி நியமித்த போது சஹ்ரான் தனது குழுவினருடன் வந்து கொழும்பில் ஆர்ப்பாட்டமும் செய் தான்.
மார்க்கத்தில் தீவிரமான ஒருவனாகவே சஹ்ரான் காணப்பட்டான். இதனால் ஏதே னும் காரணங்களைக் கூறி குழப்பத்தை உண்டுபண்ணுவான். இமாம்களை கூட சைத்தான் என்று சாடுவான். 2017 ஆம் ஆண்டில் காத்தான்குடியில் ஏற்பட்ட பிரச்சி னையை அடுத்து சஹ்ரான் குழு ஊரை விட்டு ஓடியது. இதற்கு பின்னர் தான் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து ஆயுத ரீதியான போக்கில் செயற்பட்டுள்ளனர்.
கேள்வி: சஹ்ரான் குழு காத்தான்குடியில் குண்டுகளை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளனர்.
பதில்: இந்த சம்பவங்கள் அனைத்துமே குறுகிய காலப்பகுதியில் தான் இடம்பெற்றுள்ளன.
கேள்வி: பாதுகாப்பு தரப்பு நீண்ட காலமாக சஹ்ரான் குழுவை கண்காணித்ததாகக் கூறுகின்றது. பள்ளிவாயல் சம்மேளனம் இவர் குறித்து கவனத்தில் கொள்ள வில்லையா ?
பதில்: காத்தான்குடி நகருக்குள் சஹ்ரான் குழு 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் செயற்படவில்லை. பாலமுனை மற்றும் ஒள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் தான் குண்டுகளை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளனர். இவர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகம் தலைகுனிவை சந்தித்துள் ளது. தெரிந்திருந்தால் அனுமதித்திருக்க மாட்டோம். ஆனால் இலங்கை புலனாய்வு பிரிவு, இராணுவம் மற்றும் பொலிஸார் என்ன செய்தனர். இடம்பெறப்போகும் தாக்குதல் குறித்து ஏற்கனவே எச்சரித்தும் ஒன்றும் செய்யாதது ஏன்?
கேள்வி: இந்தியா எவ்வாறு சஹ்ரான் குழுவினர் குறித்து கூர்மையாக கண்காணித்தது?
பதில்: அவர்கள் கண்காணித்துள்ளார்கள். தகவல் கொடுத்துள்ளார்கள். அரசாங்கம் என்ன செய்தது. நாங்கள் அப்பாவிகள். எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தகவல் கிடைத்திருந்தால் வழங்கியிருப்போம். சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசா ங்கம் ஏற்க வேண்டும்.
கேள்வி: கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஏன் உங்களுடன் பகையுணர்வுடன் உள்ளனர் ?
பதில்: இது தவறான செய்தியாகும். வியாழேந்திரன் போன்றவர்களே அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு தவறான கூற்றைப்பரப்புகின்றனர். கோவிலை உடைத்தேன் என்று கூறுபவர்கள் அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முன்வருவதில்லை. கிழக் கில் தமிழ் மக்களுக்கு நான் செய்தது போன்று அங்குள்ள எந்த தமிழ் அரசியல்வாதியும் செய்யவில்லை. அதனை அந்த மக்கள் அறிவார்கள். தேர்தலின்போது நான் கூறிய விடயத்தையே வீடியோ பதிவுகளாக காண்பிக்கின்றனர். அவ்வாறு எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை.
கேள்வி: சுதந்திரக் கட்சிக்குள் உங்களது எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறு அமை யும்?
பதில்: பயங்கரவாதத்துக்கு நாங்களும் துணை போேனாம் என்ற போலியான குற்றச்சாட்டு காணப்படுகின்றது. தலதா மாளிகைக்கு முன்னால் ஞானசார தேரர் சீ.சீ.டி.வி பதிவு ஒன்றைக் காண்பித்தார். இது ஏற்கனவே வெளிவந்த விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகளினால் கட்சியை விட்டு வெளியேறவேண்டியதில்லை. ஆனால் எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து இரு வாரங்களுக்குள் அறிக்கை விட வேண்டும் என்ற கோரிக்கையினை ஜனாதிபதியிடம் விடுத்தேன். சமூகத்துக்காகத்தான் பதவியை விட்டுச் சென்றேன். ஜனாதிபதியினால் என்னைப் பதவி நீக்கம் செய்ய முடியாது. அதில் சட்ட சிக்கல் உள்ளது.
எவ்வாறாயினும் எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும். இது ஜனாதிபதியின் பொறுப்பாகும். மூடி மறைக்க வேண்டிய தேவையில்லை. இல்லையென்றால் வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை நேரடியாகவே ஜனாதிபதிக்கு கூறி விட்டேன்.
தலதா மாளிகைக்கு முன்பாக இருந்து கொண்டு எனக்கு எதிராக ஞானசார தேரர் அப்பட்டமான பொய்யைக் கூறி னார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் நான் கடுமையாக செயற்படுவேன். இனி எங்களுக்குப் பதவிகள் முக்கியமில்லை. இவர்களுடன் போராடுவோம். எமது சமூகத்தையும் தயார்படுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்கள் அச்சப்பட்டு முடங்கியுள்ளனர். அவர்களை வெளியில் கொண்டுவர வேண் டும். தைரியமாக வியாபாரங்களில் ஈடுபட ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
7 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வெளி நாட்டில் தஞ்சம் கோரியுள்ளனர். இதனை அனுமதிக்க முடியாது. இது எங்கள் நாடு. நாட்டை விட்டுப் போக வேண்டிய தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை. முஸ் லிம் மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வலியுறுத்துவோம். இலங்கை எங்களுக்கு உதவி செய்ய மறுத்தால் சர்வதேச சமூ கத்தை நாடுவோம்.
கேள்வி: தற்போதைய அரசாங்கம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
பதில்: நம்பிக்கையற்ற வகையில் தான் அரசாங்கம் நடந்துகொண்டுள்ளது. பயங்க ரவாதி குண்டு வெடிக்க வைத்ததற்காக சாதாரண முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது எவ்விதத்தில் நியாயமாகும். முஸ்லிம் மக்களைத் தாக்கிய, அவர்களது சொத்துக்களை அழித்தவர்களைக் கைது செய்து உடனடியாக விடுவித்துள்ள போது அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்.
லியோ நிரோஷ தர்ஷன்