செய்திமுரசு

சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா?

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது. இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்? 2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள், தங்களுடைய தலைமையை நம்பக்கூடிய வகையிலும் ...

Read More »

கடன் அட்டையை வெறுக்கும் அவுஸ்திரேலியர்கள்!

அவுஸ்திரேலியாவில் கடனட்டை பாவனை அதிர்ச்சிதரும் வகையில் சரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தரவுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் மாத்திரம் சுமார் ஏழு லட்சத்து 81 ஆயிரம் அவுஸ்திரேலியர்கள் கடனட்டை பழக்கத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஐம்பது லட்சம் அவுஸ்திரேலியர்கள் கடனட்டைகளை பயன்படுத்திவருகின்றது. இந்த நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்தப்பாரிய மாற்றத்திற்கமைய மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் பேரை கடனட்டைப்பாவனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் 330 பில்லியன் டொலர்களுக்கு கடனட்டைகளால் மாத்திரம் நுகர்வோர் கொள்முதல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மருத்துவரின் கொலை எவ்வாறு கசிந்தது!

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் அதிரடியான புதிய தகவல்கள் கசிந்துள்ளன. சிட்னியில் உள்ள மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் ப்ரீத்தி ரெட்டி (வயது 32) மார்ச் 4 ஆம் திகதி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து அவரது காரிலேயே சடலமாக மீட்கப்பட்டார். ப்ரீத்தி மற்றும் ஹர்ஸவர்தன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இடையில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் காதலன், ப்ரீத்தியை திட்டமிட்டுக் ...

Read More »

மாதா அமிர்தானந்தமயி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம்!

இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆன மாதா அமிர்தானந்தமயி தேவி வரும் ஏப்ரல்- மே மாதங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மாதா அமிர்தானந்தமயி தேவி  இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார்.  இவர் பக்தர்களால் “அம்மா” என்றும், மேலைநாட்டு பக்தர்களால் “அரவணைக்கும் அன்னை” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற கிராமத்தில் மாதா அமிர்தானந்தமயிமடம் அறக்கட்டளை மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டுள்ளார். இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளிளும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் ...

Read More »

சிறிலங்கா காவல் துறைக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது!

குற்றம் தொடர்பில் காவல் துறைக்கு  தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, காவல் துறைக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு யாழ்.பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளதென ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் யாழ்காவல் துறை தொடர்பில் வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அமர்வின் போது குற்றங்களை தடுக்க விசேட காவல் துறை காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். ...

Read More »

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த !

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது! – நிலாந்தன்

2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்கப்பட்ட ...

Read More »

கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயார்!

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை ...

Read More »

தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை தகர்ந்தது!

இந்த நாடாளுமன்றத்தில், புதிய அரசமைப்பு ஒன்று உருவாகுமென்றும் அதில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பங்களிப்பு முழுமையாக இருக்குமென்றும் நம்பினோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இப்போது நிலைமை அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையில்லை. அது தகர்ந்துவிட்டது என்றார். மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஜனாதிபதியோ, அரசாங்கமோ நிராகரித்தால், அரசியல் தீர்வை நிராகரித்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கிடைக்குமெனக் கேட்ட அவர், அரசியல் ரீதியாக நாங்கள் வேறுபட்டாலும் கூட நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ...

Read More »

வர்த்தகர்களுக்காக தினமும் வரிச் சலுகை வழங்க முடியாது!

வர்த்தகர்களுக்காக தினமும் வரிச்சலுகை வழங்க முடியாதென, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று (12) நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் என்றார். அத்துடன், புதிய வர்த்தக செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More »