அவுஸ்திரேலியாவில் கடனட்டை பாவனை அதிர்ச்சிதரும் வகையில் சரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தரவுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மாத்திரம் சுமார் ஏழு லட்சத்து 81 ஆயிரம் அவுஸ்திரேலியர்கள் கடனட்டை பழக்கத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஐம்பது லட்சம் அவுஸ்திரேலியர்கள் கடனட்டைகளை பயன்படுத்திவருகின்றது.
இந்த நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்தப்பாரிய மாற்றத்திற்கமைய மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் பேரை கடனட்டைப்பாவனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் 330 பில்லியன் டொலர்களுக்கு கடனட்டைகளால் மாத்திரம் நுகர்வோர் கொள்முதல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன.
சராசரியாக ஒவ்வொரு கடன் அட்டையின் வழியாகவும் 22 ஆயிரம் டொலர்கள் செலவு செய்யப்படுகின்றன.
எப்படியிருப்பினும், கடந்த நான்கு வருடங்களில் கடனட்டைப்பாவனையிலிருந்நு வெளியேறிய நுகர்வோர்களின் எண்ணிக்கை கடந்தவருடம்தான் மிகவும் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடன் அட்டை வழியாக தங்களது கொள்முதல்களை மேற்கொள்வோரும் கட்டணங்களை செலுத்துவோரும் தொடர்ந்து தமது பரிவர்த்தனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இருந்த போதும் ரோயல் கமிஷன் விவகாரத்துக்கு பிறகு கடனட்டைகளை பெறுவதில் கிடுக்குப்பிடியாக மாறியுள்ள வங்கி நடைமுறைகளும் – பொருட்களை கொள்முதல் செய்பவர்கள் தவணை முறையில் பணத்தை செலுத்தக்கூடிய பணப்பரிவர்த்தனைமுறை அநேகமாக எல்லா இடங்களிலும் நடைமுறைக்கு வந்துவிட்டதும்கூட – நுகர்வோர் கடனட்டை பாவனையிலிருந்து வெளியேறுவதற்கு காரணங்களாகும்.
இது தொடர்பான விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ள நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal