7 தமிழர்கள் விடுதலையில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சீக்கிய மத நிறுவனரும், அதன் 10 குருமார்களில் ஒருவருமான குருநானக்கின் 550-வது பிறந்த நாளையொட்டி, 550 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங்கின் படுகொலை வழக்கில், தீவிரவாதி பல்வந்த் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படிருப்பதுடன், 25 முதல் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை : நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் !
கடந்த ஆகஸ்ட் 01 முதல் 31 வரை அவுஸ்திரேலியா மேற்கொண்ட எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்டுள்ள மாதந்திர செய்திக்குறிப்பில், பல இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில், இலங்கையிலிருந்து 13 பேருடன் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்ட இவர்கள் யாருக்கும் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கூறியுள்ளது ஆஸி. எல்லைப்படை. இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் இவர்கள் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதே சமயம், அவுஸ்திரேலிய செல்ல ...
Read More »எல்லை தாண்டி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் !
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண இதுவரை காலமாக அரசியல் தலைவர்கள் கையாண்ட ஒரு எல்லைக்கு உட்பட்ட முயற்சிகளை தாண்டி வெகு விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தியாகமும் என்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த தமது அரசாங்கத்தை உருவாக்குவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் அமைப்பாளர்கள் ...
Read More »அரசியல் தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தர். அவர் மேலும் தெரிவிக்கையில்,, நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்மந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை.நீதிமன்றத்தின் கட்டளையினை நடை முறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் கட்டளை ...
Read More »செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள்!
தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும். முல்லை மண்ணில் அரங்கேற்றப்பட்ட மனிதப்பேரவலங்களுக்கான நீதிக்கோரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கையில் அதே மண்ணில் வரலாற்றுப்பழைமை வாய்ந்த செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் உருவான பௌத்த விகாரை இன முறுகல்களுக்கு வித்திட்டது. தற்போது அந்த விகாரையின் விகாராதிபதியின் மரணத்தின் பின்னர் அவரது உடல் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டு மீண்டும் தமிழினத்திற்கு நீதி மறுதலிக்கப்பட்டுள்ளது. ...
Read More »நடுவீதியில் காரிலிருந்து விழுந்து கர்ப்பிணிபெண் மரணம்- அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் மேல்பேர்னின் வடமேற்கு பகுதியில் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் காரிலிருந்து விழுந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஆரம்பித்த சம்பவம் வீதியில் முடிவடைந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 32 வயது கர்ப்பிணியை குறிப்பிட்ட வீட்டில் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார் பின்னர் காரிலும் அச்சுறுத்தியுள்ளார் அதன் போது குறிப்பிட்ட பெண் தவறி விழுந்ததில் பலத்த காயங்களிற்கு உள்ளானார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நிலையில் ஹெலிக்கொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் அங்கு உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை சிசேரியன் மூலம் ...
Read More »கிறிஸ்துமஸ் தீவில் இருப்பது சித்திரவதை!
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கைத் தமிழ்க் குடும்பம் தொடர்பான வழக்கை முழுமையாக விசாரிக்க, அண்மையில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், வழக்கு முடியும் வரை அவர்களை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், இத்தீவில் இருப்பது மனரீதியான துன்புறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ள பிரியா- நடேசலிங்கம் இணையர், அவர்களது குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதாக வேதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் ...
Read More »இணக்கமின்றி நிறைவான மைத்திரி – மஹிந்த சந்திப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அக்கட்சியின் போசகர் பசில் ராஜபக் ஷ ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற மிக முக்கிய சந்திப்பொன்று இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவும், சுதந்திரக்கட்சியும் கூட்டிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் போது, பொதுஜன பெரமுனவின் போசகர் பசில் ராஜபக்ஷ, கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பொதுஜன ...
Read More »த.தே.கூட்டமைப்பு – ஐ.தே.கட்சி சந்திப்பு நாளை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதித் தீர்மானத்தினை எடுத்திருக்காத நிலையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. முன்னதாக சஜித் ...
Read More »இரண்டாவது ராஜபக்சவுக்கு எதிராக இரண்டாவது பிரேமதாச!
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி அதன் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளர் என்று சொல்லக்கூடிய சஜித் பிரேமதாசவை களமிறக்கியிருக்கிறது. ஜனாதிபதி பதவிக்கான இந்த போட்டியில் ஒரு இரண்டாவது ராஜபக்சவுடன் ஒரு இரண்டாவது பிரேமதாச மோதுகிறார் என்று இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ நேற்று சனிக்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ; ஐக்கிய தேசிய கட்சி நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ...
Read More »