ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இசைக் கருவிகளின் தொகுப்பில் இருந்த 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வயலின் ஒன்று அகதியாக வாழ்ந்து வரும் சிரியாவை சேர்ந்த இளம் இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 14 வயதான அபூட் கப்ளோ, அலெப்போவில் இருந்த அவரின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வருகிறார். அபூட்டை சந்தித்த திரைப்பட இயக்குனர் சுசீ அட்வூட் இசையின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அதேசமயம் அவரிடம் இசைக்கருவிகள் இல்லாததையும் அறிந்திருந்தார். இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது வரலாற்று சிறப்புமிக்க வயலினை ...
Read More »செய்திமுரசு
பாகிஸ்தானிடம் தோல்வி: இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான தினம் – கில்கிறிஸ்ட்
அவுஸ்ரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று இந்தியா கோப்பையை இழந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார். இந்திய அணிக்கு அது மோசமான நாளாக இறுதி ஆட்டம் அமைந்து விட்டது. ...
Read More »தமிழீழ மண்ணில் நம்பிக்கைக்கு உரிய ஒரு தலைவராக விக்னேஸ்வரன்!- காசி ஆனந்தன்
தமிழீழ மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தன்கடமைகளை மேற்கொண்டுவரும் தமிழீழத்தின் வடமாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி .வி விக்னேஸ்வரன் அவர்களை உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்கள் நன்றி உணர்வோடு பார்க்கிறார்கள், அவர்மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவர முயன்ற தமிழரசுக்கட்சியை அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.என்கிறார் தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிவரும் இந்திய ஈழத்தமிழர் நட்புறவு இயக்கத்தின் தலைவர் காசி ஆனந்தன் . அண்மையில் வெளியாகி உள்ள ஓர் அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறி இருப்பதாவது , தந்தை செல்வாவின் தலைமையில் அறப்போராட்ட காலத்திலும் தலைவர் பிரபாகரன் ...
Read More »இந்தியக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் இணையமூடாக அவுஸ்ரேலியாவிற்கு விண்ணப்பம்!
எதிர்வரும் ஜுலை 1ம் திகதி முதல் இந்தியக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் Online-இணையமூடாக அவுஸ்ரேலிய Visitor விசாவுக்கு விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் 4 மாதங்களில் மட்டும் 65,000 இந்தியர்களுக்கு அவுஸ்ரேலியாவுக்கான Visitor Visa வழங்கப்பட்டிருப்பதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்பின்னணியில் அவுஸ்ரேலியா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருவதால் இந்நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக துணை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார். இதன்படி ImmiAccount மூலம் இணையமூடாக எந்தநேரமும் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியும் என்பதுடன், இணையமூடாக கொடுப்பனவை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் விசா விண்ணப்பத்தின் பரிசீலனை ...
Read More »அவுஸ்ரேலிய பக்டீரியா வகையொன்று சிறிலங்காவில் அறிமுகம்!
டெங்குவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய பக்டீரியா வகையொன்று சிறிலங்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வகை பக்டீரியாவை சிறிலங்காவில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இந்த வகை பக்டீரியாவின் ஊடாக டெங்கு நுளம்பின் விசத்தை குறைக்க முடியும் என அவர் கொழும்பு ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். வியட்னாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த பக்டீரியா வகை பரிசோதிக்கப்பட்டுள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக இந்த பக்டீரியா பயன்படுத்தப்படுவதாக அவுஸ்ரேலிய மொனொஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வகை பக்டீரியாவை சிறிலங்காவில் ...
Read More »போக்கிலிகளான சிவஞானம், சுகிர்தனுக்கு கதிரைகள் பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்துகின்றேன்! சிவகரன்
போக்கிலிகளான சீ.வி.கே சிவஞானம் மற்றும் சுகிர்தன் போனறவர்களிற்கு மாகாணசபையினில் கதிரை பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்தியுள்ளார் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன். அத்துடன் சீ.வி,கே.சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி பதவி ஆசைபிடித்து திரிகின்றார். அவர் தமிழ்தேசிய அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவரல்ல என்றும் அவைத்தலைவர் பதவி ஆசைபிடித்து தானே முதல்வருக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டிய சிவகரன், தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார் மாவை எனவும் அடிப்படை கட்சி கட்டமைப்போடு இருந்த தமிழரசு கட்சியை அழித்து சின்னாபின்னமாக்கிய பெருமை மாவை சேனாதிராயாவையே சாரும் எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ...
Read More »மன்னிப்பு கோரினார் அவுஸ்திரேலியா நகரசபைத்தலைவர்!
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் டன்டினோங் நகரசபைத் தலைவரான திரு ஜிம் மெமெட்டி அவர்கள் அண்மையில்இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கை சென்றிருந்த ஜிம்அங்குள்ள சிங்களப்பேரினவாத அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள வர்த்தகர்கள் முதலானோரைச்சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்புக்களையடுத்து அவுஸ்திரேலியா திரும்பியிருந்த திரு ஜிம் இலங்கை அரசிற்கு சார்பான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இவரது இத்தகையச்செயற்பாடுகள் மெல்பேர்ணில் வதியும் ஈழத்தமிழர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஜிம் அவர்கள் எடுத்திருந்த இந்நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் ஏதிலிகள் கழகச் செயற்பாட்டாளர்கள் தமது சமூக வலையத்தளத்தில்ஜிம் ...
Read More »அகதிகளின் அவலத்தின் அடையாளம் ஆற்றில் மிதக்கிறது!
உலகளாவிய ரீதியில் நிலவும் அகதிகள் நெருக்கடியை அடையாளப்படுத்தும் விதமாக காற்றினால் நிரப்பப்பட்ட உருவம் ஒன்று மெல்பேர்னின் Yarra ஆற்றில் மிதக்க விடப்பட்டுள்ளது. உயிர்காக்கும் அங்கி அணிந்தபடி கால்களைக் கட்டிக்கொண்டிருக்கும் அகதி ஒருவரை அடையாளப்படுத்தும் இந்த கலை வேலைப்பாடு, Belgian artist collective-இன் Schellekens , Peleman ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த வேலைப்பாடு, தற்போது ஆஸ்திரேலியாவிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாதம் 19 – 25ம் திகதி வரை அகதிகள் வாரம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இதையொட்டி குறித்த ...
Read More »இந்தியர்கள் அவுஸ்ரேலியாவுக்கு ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கலாம்!
அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி, ஜூலை, 1ம் திகதி முதல் அமல் படுத்தப்பட உள்ளது.இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் தற்காலிக துாதர், கிறிஸ் எல்ஸ்டாப்ட், டில்லியில் கூறியதாவது:அவுஸ்ரேலியாவுக்கு, இந்தியர்கள் வருகை, சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, ஜூலை முதல், இந்த ஆண்டு, மார்ச் வரை, அவுஸ்ரேலியாவுக்கு, 2.65 லட்சம் இந்தியர்கள் வந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 15.4 சதவீதம் அதிகம்.அவுஸ்ரேலியா செல்ல விரும்பும் இந்தியர்கள், எளிதில் விசா பெற, வசதி செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா கேட்டு, ...
Read More »முதல்வருக்கு ஆதரவாக முல்லையில் ஆர்ப்பாட்டம்!
வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வடக்கு பூராகவும் போராட்டங்களுகளும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று((17) முல்லைத்தீவில் சுற்றுவட்ட வீதியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் கூட்டம் கச்சேரிக்கு முன்பாக தமிழரசு கட்சிக்கு எதிராகவும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்ககையில் ”உங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி நாங்கள். உங்கள் முடிவே எங்களின் முடிவு. உங்களின் சார்பாக விக்னேஸ்வரனுக்கு துணை நிற்போம்” என்று ...
Read More »