போக்கிலிகளான சீ.வி.கே சிவஞானம் மற்றும் சுகிர்தன் போனறவர்களிற்கு மாகாணசபையினில் கதிரை பெற்றுக்கொடுத்ததிற்கு மனம்வருந்தியுள்ளார் தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன்.
அத்துடன் சீ.வி,கே.சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி பதவி ஆசைபிடித்து திரிகின்றார். அவர் தமிழ்தேசிய அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவரல்ல என்றும் அவைத்தலைவர் பதவி ஆசைபிடித்து தானே முதல்வருக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டிய சிவகரன், தனக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளார் மாவை எனவும் அடிப்படை கட்சி கட்டமைப்போடு இருந்த தமிழரசு கட்சியை அழித்து சின்னாபின்னமாக்கிய பெருமை மாவை சேனாதிராயாவையே சாரும் எனவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் சுகிர்தன் போனறவர்களிற்கு மாகாணசபையினில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பத்தை சிவகரனே பெற்றுக்கொடுத்திருந்தார்.
தனது இளைஞரணி ஊடாக அவர் சுகிர்தனிற்கு அவர் பாணியாற்றிக்கொண்டிருந்த சரவணபவனை தாண்டி சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்.
எனினும் பின்னர் சிவகரன் அவர் சார்ந்த தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.