கடந்த ஆண்டு, ஜூலை முதல், இந்த ஆண்டு, மார்ச் வரை, அவுஸ்ரேலியாவுக்கு, 2.65 லட்சம் இந்தியர்கள் வந்துள்ளனர்.
இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 15.4 சதவீதம் அதிகம்.அவுஸ்ரேலியா செல்ல விரும்பும் இந்தியர்கள், எளிதில் விசா பெற, வசதி செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா செல்வதற்கான விசா கேட்டு, ஜூலை, 1ம் திகதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குடியேற்றத்துறை இணையதளத்திலேயே, இதற்கான விண்ணப்பத்தை பெற்று, விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்ப கட்டணத்தையும் மின்னணு முறையிலேயே செலுத்தலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வசதியும் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal