முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னவிற்கு இலங்கை குடியுரிமை வழங்க இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்குமாயின் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யலாம் என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னைய ஆட்சி காலத்தின் போது தங்கள் தலைவர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள போதும் இலங்கை குடியுரிமையை மாற்றித்தருமாறு தான் கூறியிருந்ததாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி முன்னிலை சோஷலிசக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவியதால் ...
Read More »செய்திமுரசு
அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்
அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87) மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திய அம்மை நோய்க்கு கடந்த 1960-ம் ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டறிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டொனால்ட் ஏ. ஹென்டர்சன். அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக அம்மை நோயால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் ...
Read More »ஒரு நாள் கிரிக்கெட்- அவுஸ்ரேலியா வெற்றி
சிறீலங்காவிற்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது அவுஸ்ரேலியா. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிறீலங்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. அவுஸ்ரேலியாத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டார்க். இந்த மைல்கல்லை ...
Read More »கறுப்பு ஜுலை“ இரத்தக் களரியை நினைவுகூர்ந்து இரத்த தானம்
“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்துவருகிறது. அந்தவகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும். “இரத்த தானம்”, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை ...
Read More »மிட்செல் ஸ்டார்க் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒருநாள் போட்டியில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மிட்செல் ஸ்டார்க் 2-வது விக்கெட்டாக தனஞ்செயா டி சில்வாவை 2 ரன்னில் ஆட்டம் இழக்க வைத்தார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த போட்டிக்குப்பின் ஸ்டார்க் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். தற்போது ...
Read More »அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவுஸ்ரேலிய நாட்டிற்கு வெளியே உள்ள அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தை மூடுமாறு வலியுறுத்தி அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தடுப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவின் பிரதான நகருக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். பசுபிக் தீவான நவ்றூ மற்றும் பப்புவான நியூகினியிலுள்ள மனூஸ் தீவு ஆகியவற்றிலுள்ள தடுப்பு நிலையங்களில் பணியாற்றியவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தடுப்பு நிலையங்களில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ...
Read More »குவின்ஸ்லாந்து – தமிழ் எழுத்தாளர் விழா -2016
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு 27 – 08 – 2016 இல் கோல்ட்கோஸ்டில் நடைபெறும். நடைபெறும் இடம்: Auditorium, Helensvale Library, Helensvale Plaza Helensvale 4212, Gold coast, QLD இவ்விழாவில் கண்காட்சிகள், கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, ...
Read More »மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா 2016” பற்றிய செய்தி
மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது. மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இந்த தமிழர் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 – 01 – 2016 அன்று நடைபெற்றது ஒஸ்ரேலியாவின் விக்டோறியா மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மெல்பேர்ண் நகரில் ஈஸ்ட் பேவுட் றிசேவ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. லிங்கேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் ...
Read More »பரமற்றா நகரில் தமிழரின் பொங்கல் விழா
தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும் ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து பொங்கல்விழா என்றுகட்டியம் கூறியது. நிற்குமிடம் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் பேசி இனிமை பகிர பொங்கல் உண்டு கூடி மகிழும் நல்லநாள் பொங்கல்நாள் என்பது ...
Read More »ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் 2015
ரேடியோதொன் நிதிசேகரிப்பு நிகழ்வு, ஈழத்தில், வடகிழக்கு மாகாணத்தில் மிக மோசமாக மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டநிலையில் காணப்படும் எங்கள் தமிழ் உறவுகளின் அவலத்தைப் போக்கவும்,அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அந்த தமிழ் உறவுகளின்வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 23வதுமுறையாக ஓஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “மீள்குடியேற்றப் பட்டிருக்கும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்திற்கு” ஆதரவாக விக்டோரிய ஈழத்தமிழ்சங்கத்தின் 3CR தமிழ்க்குரல், 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலிவானொலிகளின் ஊடாக காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது. ...
Read More »