“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்துவருகிறது.
அந்தவகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும்.
“இரத்த தானம்”, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் 1.00 மணி வரையும், 27ம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரையும் Mt.Waverly, Blackburn வீதியில் Pinewood Shopping centre இல் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்தவங்கி ஊடாக நடை பெற்றது.
ஒகஸ்ட் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.00 மணிவரை Bundoora இல.21 Copernicus Crescent இல் உள்ள Polaris Town Centre (Off Plenty Rd),அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க இரத்தவங்கி ஊடாகவும் இரத்ததானம் வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இப்புனிதகொடைக்கு உதவ முன்வரும் கொடையாளிகள் தயவுசெய்து உங்கள் பெயர்களை முன்கூட்டியே 0414 185 348 அல்லது 0407561269 அல்லது 0413 506 183 எனும் இலக்கத்திலும் தொடர்பு கொண்டு பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
தனிப்பட்டமுறையிலும் இந்நிகழ்வுகளைப் பற்றி தெரிந்தவர்கள் உறவுகளிற்கு தெரியப்படுத்தி கறுப்புஜுலை நினைவாக நடைபெறும் 21வது இரத்த தானம் நிகழ்விலும் பங்கெடுத்து கொள்ளுவதோடு, தாயகத்து தமிழ் மக்களின் தற்போதைய துயர்நிலை அறிந்து, ஓஸ். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முன்னெடுத்திருக்கும் மனிதாபிமான சேவைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி தாராளமனதுடன் நிதிப் பங்களிப்பால் துயர் துடைக்க முன்வருமாறு அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.