சிறீலங்காவிற்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது அவுஸ்ரேலியா.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிறீலங்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. அவுஸ்ரேலியாத் தரப்பில் ஜேம்ஸ் ஃபாக்னர் 4 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டார்க். இந்த மைல்கல்லை அவர் தனது 52-ஆவது ஆட்டத்தில் எட்டியுள்ளார்.
பின்னர் ஆடிய அவுஸ்ரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. அந்த அணியில் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.