செய்திமுரசு

ஜெனிவா தீர்மானித்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு!

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றும் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும்” என அமெரிக்க தூதரக அதிகாரி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரனை சந்தித்தவேளையே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான அர்ப்பணிப்பு இலங்கை அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் உறவை விஸ்தரிப்பதற்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ...

Read More »

அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியாது!

அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக்கொண்டு, உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் உரித்து பொது எதிரணிக்கு இல்லை. அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது. பொது எதிரணியினரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதன் காரணமாகவே பொது எதிரணியினருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற தீர்மானத்திற்கு சபாநாயகர் வந்திருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொது எதிரணியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது என்பது ...

Read More »

கனடாவில் தம்பதிக்கு இனவெறி மிரட்டல்!

கனடாவில் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவில் ஆன்டாரியோவில் உள்ள ஹாமில்டனில் வால்மார்ட் மையத்துக்கு இந்திய தம்பதி வந்திருந்தனர். அங்கு அவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தியிருந்தனர். பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்ப வாகனத்தை எடுக்க வந்தனர். அப்போது அங்கு இருந்த வெள்ளைக்காரர் டேல் ராபர்ட்சன் (47) என்பவருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது டேல்ராபர்ட்சன் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல் விடுத்தார். நான் கனடாவை சேர்ந்தவன். எனக்கு தான் இங்கு இருக்க உரிமை உள்ளது. உங்களை ...

Read More »

மர்ம அச்சுறுத்தல்- அவுஸ்திரேலிய பாடசாலையிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம்!

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து மர்ம அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத அச்சுறுத்தலை தொடர்ந்து தீடிரென பாடசாலையை சுற்றிவளைத்த பெருமளவு காவல்துறையினர் அங்கிருந்து மாணவர்களை வெளியேற்றியுள்ளனர். மேலும் பெற்றோர்களை பாடசாலையிலிருந்து விலகியிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். காலை 9 மணிக்கு ஆஸ்டேல் உயர்தரப் பாடசாலைக்கு விரைந்த காவல்துறையினரே மாணவர்களை அகற்றியுள்ளனர். மாணவர்கள் வெளியேற்றப்படுவதால் வாகனசாரதிகளை அப்பகுதியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை இந்த நடவடிக்கைகக்கு என்ன காரணம் என்பதை காவல்துறையினர் இன்னமும் அறிவிக்கவில்லை. இதேவேளை பாடசாலை பாதுகாப்பாக உள்ளது என ...

Read More »

முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களா ? -வெற்றிச்செல்வி

முன்னாள் போராளிகள் என்ன ரோபாக்களா ? கரண்டில்லாமல் போன உடனே வேலை செய்யாமல் போய்விட்டார்களா? ஏன் நாங்கள் அவர்களைப் பாரபட்சமாக நடத்துகிறோம்? நீங்கள் போராட்டத்தில் நின்ற ஆட்கள் என்று சொல்லி, நாங்கள் ஏன் ஒதுக்கி வைக்கின்றோம்? எங்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது என்கிறார்கள். சமூகத்தோடு மீள் இணைக்கின்றோம் என்கிறார்கள். எந்த சமூகத்தோடு இணைக்கின்றார்கள்? நாங்கள் எங்கிருந்து வந்தோம்? எங்கள் சமூகம் எது? எனது தந்தை, தாய், அக்கா, என்னுடைய மாமன், மாமி, மச்சாள், என்னுடைய உறவுகள் என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு, அயலவர்கள், என்னுடைய ...

Read More »

சிறந்த சமையலாளருக்கான போட்டியில் (Master Chef Australia) சசி செல்லையா வெற்றி!!

2018 ஆம் ஆண்டுக்கான ஆக சிங்கப்பூரில் பிறந்து தற்போது தென் அவுஸ்திரேலியாவில் வாழும் சசி செல்லையா வெற்றியடைந்துள்ளார். சிங்கப்பூரில் பிறந்த 39 வயதான சிவா அவுஸ்திரேலியாவுக்கு 2011 இல் குடி பெயர்ந்தார். தற்போது அடலெய்ட் நகரில் சிறை அதிகாரியாகப் பணியாற்றும் இவர் Master Chef Australia ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் முதற்தடவையாக 93 புள்ளிகளை அதிகூடிய புள்ளிகளாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியாவிற்கு நன்றிக் கடனாக “இரத்த தானம்”!

“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது. அந்தவகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் “இரத்த தானம்”, வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எதிர்வரும் ...

Read More »

வடமராட்சியில் தொடர் படகு எரிப்பு!

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது. தாளையடி பகுதியில் கரையில் விடப்பட்டு இருந்த படகுக்கும் அதன் இயந்திரத்திற்கும் நேற்று இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதனால் படகும் அதன் இயந்திரமும் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. தென்னிலங்கை மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு உள்ளூர் மீனவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எரிக்கப்பட்ட படகின் உரிமையாளரும் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு கடும் எதிர்ப்பு ...

Read More »

எச்சரிக்கையை மீறி மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா!- அமெரிக்கா

எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய தீபகற்பத்தில் போர் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை ...

Read More »

சிறிலங்கா பயணமாகும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்!

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சிறிலங்காவிற்கு வருகைத்தரவுள்ளார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். விஜயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் இடம்பெறவுள்ள அவரது சந்திப்புகளில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், மலிக் சமரவிக்ரம; மாகாண சபைகள், ...

Read More »