ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ...
Read More »செய்திமுரசு
நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்!
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை, கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையம், சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ‘சாங் இ ...
Read More »சபாநாயகர் இன்று வடக்கிற்கு விஜயம்!
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சபாநாயகருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கிற்கு செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றியும் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இடம்பெறவுள்ளது.
Read More »யாழ் மாநகரசபையில் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு!
யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகரச் செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, யாழ் மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு செல்லும் பார்வையாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக ...
Read More »இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைனின் நாக்கு!
நான் ஒரு பெரிய ஜீனியஸ். அற்ப மானிடப் பதர்கள் எல்லாம் பத்து கிலோ மீட்டர் தள்ளி வாருங்கள் என்று ஐன்ஸ்டைன் ஒருபோதும் ஒருவரிடமும் சொன்னதில்லை. ஐந்தாவது வகுப்பு மாணவர்கூட, ’ஐயா ஒரு ஐயம்’ என்று அவரை அணுகிவிட முடியும். குனிந்து தோளைப் பிடித்து என்ன என்று பரிவோடு கேட்பார். ஐன்ஸ்டைன் குளிக்கப் போகும்போதுகூட இடைமறித்து, ‘குவாண்டம் எந்திரவியல் என்றால் என்ன, ரொம்ப அவசரம்’ என்று நீங்கள் கேட்கலாம். அவரும் துண்டை மேஜையின்மீது வைத்துவிட்டு, இப்படி வா சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துப் ...
Read More »சிட்னியில் வரலாறு படைக்குமா இந்திய அணி?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்டுகளில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் ...
Read More »அரசியலமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல் வரும் – சம்பந்தன்
“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசியலமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும். அதில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது. ஏக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ...
Read More »ஊடக சுதந்திரத்தில் சிறிலங்கா முன்னேற்றம்!
எல்லைகளற்ற நிருபர் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரம் தொடர்பான வருடாந்த சுட்டியில் சிறிலங்கா முன்னேற்றமடைந்துள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, கடந்த 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்து இலங்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சுட்டியின்படி, உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும். ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாகபேணப்படும் நாடாக எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்தியா 138 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 146 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 139 ...
Read More »“புற்று நோய் எனக்குக் கிடைத்த பரிசு” – மனிஷா கொய்ராலா உருக்கம்
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த கடுமையான நினைவுகள்குறித்து, தன் சுய சரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், நடிகை மனிஷா கொய்ராலா. மனிஷா கொய்ராலா, 1990-களில் தமிழ், இந்தித் திரையுலகைக் கலக்கியவர். வினு வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான `1942 லவ் ஸ்டோரி’ இந்திப் படம் அடையாளம் கொடுத்தது. மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் ...
Read More »அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!
அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார். அந்த ...
Read More »