கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக் மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது வான் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அந்த கால கட்டத்தில் மோசூல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த நகரை மீட்பதற்காக அமெரிகாவின் தலைமையிலான சர்வதேச படையணியினர் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், தமது படையணியின் வான் தாக்குதல் காரணமாகத்தான் இந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை உறுதியாக கூறமுடியாது என அவுஸ்திரேலிய வான் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்!
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கன்பரா மைதானத்தில் இடம் பெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Read More »கோட்டாவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி அறிவிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்தம அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ...
Read More »அவுஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்! 45 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சுமார் 45 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை என தெரியவந்துள்ளது. சிட்னியை 40 டிகிரி செல்சியஸ் அளவுள்ள அனல்காற்று தாக்கக்கூடுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவுஸ்திரேலியாவில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவசரகாலக் குழு ஆராய்ந்து வருவதாக மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்னியின் புற நகர்ப் பகுதியில் உள்ள சில வட்டாரங்களில் வீடுகள், கடைகளில் மின்சாரம் இல்லை. வாகனமோட்டிகள், போக்குவரத்து சமிக்ஞைகளைக் கடக்கும்போது ...
Read More »அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள்!
“தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல” – சொபொக்லீஸ் (என்டிகனி) இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படவிருக்கிறார். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் செய்யாதிருக்க எம்மால் முடியுமா? கடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் யாவை? அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சியின் சூடு இன்னும் ...
Read More »இந்தியா இணைய மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா!
என்.எஸ்.ஜி நாடுகள் பட்டியலில் இந்தியா இணைவதற்கு சீனா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதே அடிப்படையில் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்தியா தெரிவித்தது. ஆனால், இந்தியாவின் முயற்சிக்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த நிலையில், ...
Read More »கவனிக்க வேண்டிய கணக்கெடுப்புகள்!
தமிழர் பிரதேசங்களில் இறுதிப் போர் நடைபெற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர், போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழு ஆகிய இரண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் இப்பணியை மேற்கொள்ள உள்ளன. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு, இலங்கையில் உள்ளவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் தங்களிடமுள்ள விவரங்களை வழங்க வேண்டும் எனவும் இவ்விரு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. “ஆகக் குறைந்தது, இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன் மூலமாவது, அவர்களுக்கு மரியாதை ...
Read More »மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்து பலி!
உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இனத்தின் கடைசி வாத்து இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ...
Read More »மே மாதத்திற்கு முன் மாகாணசபை தேர்தல்!- ஜனாதிபதி பிரேரணை
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன் ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமைக்கு அமைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துடன் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என்ற பிரேரணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்தார். ஜனாதிபதியின் சிறப்பு அமைச்சரவையின் பரிந்துரைக்கு அமைய இப்பிரேரணை அமைச்சரவையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாண சபைகளுக்கும், பதவிக்காலம் முடிவுறும் தறுவாயில் உள்ள மாகாண சபைகளுக்கும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன் ஒரே ...
Read More »வவுனியா போராட்டம் முக்கியமானது : விக்னேஸ்வரன்
வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறவிருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இந்த போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34/1 ...
Read More »