பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் 8000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்படவுள்ளதாக அநுராதபுரம் வலய காவல் துறை அத்தியட்சகர் திலினஹேவா பத்திரன தெரிவித்தார். பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வலயங்களின் பாதுகாப்புக்காக 4000 காவல் துறையினரும் 2000 இராணுவ வீரர்களும் 1000 சிவில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடற்படையினர் என மொத்தம் 8ஆயிரம் பாதுகாப்பு ...
Read More »செய்திமுரசு
தர்ம சக்கர ஆடை விவகாரம் ! காவல் துறை அதிகாரிக்கு இடமாற்றம்!
மகியங்கனை, ஹசலக காவல் துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் சந்தன நிஷாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஹஸலக பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக காவல் துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் இவ்வாரு குருணாகல் காவல் துறை நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read More »பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா தயார்!
சகல இன மக்களிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழிப்பதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஐக்கிய அமெரிக்கா தயாராகவுள்ளது. அதேபோன்று பயங்கரவாத தாக்குதல்களை நாட்டில் இருந்து முழுமையாக ஒழிக்க சிறிலங்கா அரசாங்கம் கேட்கும் அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்தாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தூதுவர் எலைனா பீ.டெப்லிட்சுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று ...
Read More »அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள ஈழ அகதியின் வேண்டுகோள்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின் குடிவரவு தீர்ப்பாயத்திற்கு அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் ...
Read More »மனுஸ் தீவில் தனக்குத்தானே தீமூட்டி கொண்ட அகதி!
மனுஸ் தீவில் அகதி ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் அவர் உயிராபத்து எதுவுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சோமாலியாவை சேர்ந்த 30 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தீக்குளித்தார். அங்குள்ள அகதிகள் நல அமைப்பு வட்டாரங்களின் ஊடாக இந்த தகவல் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி பீடம் ஏறியது முதல் இதுவரை சுமார் 70 தற்கொலை முயற்சி சம்பவங்கள் ...
Read More »சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா?
யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். “மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் – மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். “அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டியோ”? மற்றவரின் பதில், குண்டு வெடித்தது போல ...
Read More »சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை!
சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரோம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தாலி தலைநகரான ரோமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு நகர சபையானது சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் உலாவுவது மற்றும் அன்பின் பாலத்தில் காதல் சின்னத்தை (பூட்டு) பதிவிடுவதற்கு அபராதம் விதித்துள்ளது. ‘ட்ரெவி நீருற்று’ போன்ற முக்கியமான சுற்றுலா தளங்களில் நொறுக்கு தீனிகள் தின்பது மற்றும் பொது நீர்க்குழாய்களில் வாய் வைத்து நீர் அருந்துவது போன்றவற்றிற்கும் தடை விதித்துள்ளது. ‘ஸ்கிப் தி லைன்’ ...
Read More »முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் !
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் ...
Read More »ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும்!
மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றிப் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கப்படும் ...
Read More »உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள்!
தேர்தல் என்று வந்தால் உங்கள் உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள் என்று. அப்போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்டமாற்றாகக் கோரியே கொடைகள் தரப்பட்டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார். கேள்வி: 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கூறியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அதைத் தீர்மானிப்பது அவர் அல்ல. எமது மக்களே! அவரைப் பதவிக்குக் கொண்டுவர நாங்கள் 2014இல், 2015இல் பாடுபட்டது அவர் எங்களுடன் சேர்ந்து பேசி எமது ...
Read More »