அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், அரசாங்கத்தில் இரண்டுமுறை உயரிய பொறுப்பு வகித்தவருமான ஜுலி பிஷப், தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக கூறியுள்ளார் நீண்ட காலமாக நிலவிவந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் வகையில் தனது இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். இதேவேளை, லிபரல் கட்சியின் முதலாவது பெண் துணைத் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியமையை எண்ணி பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். ஜுலி பிஷப், அவுஸ்திரேலியாவில் ...
Read More »செய்திமுரசு
நெல்லுக்கு விலைச் சூத்திரம்!
அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் கூறியுள்ளார். அரசி விலைக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் வர்த்தமானி அறிவித்தல் வௌியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். அநுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அமைச்சர் பி. ஹெரிசன் இவ்வாறு கூறியுள்ளார்.
Read More »ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்சி பேதமின்றி செயற்பட வேண்டுமாம்!
19வது அரசியலமைப்புக்கு அமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கட்சி பேதமின்றி அனைவரும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.
Read More »புற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல் பார்வை!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் படுதல், வாழ்க்கைத்தரம் குறைந்து, இறப்புக்கான வாய்ப்பு அதிகரிக்க வழிவகுக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நோயுற்ற தன்மை, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிப் ...
Read More »இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: இம்ரான்கான்
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டு உள்ளார். காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் ...
Read More »11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்! கடற்படை வீரர் கைது!
2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவரே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய கடற்படை வீரரரே கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட இளைஞர்களில் மூன்று இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த கடற்படை வீரர் நேற்று இரவு கைது ...
Read More »19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாம்!
தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை மைத்ரி நினைவுகூர்ந்தார். நேறறு (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே 2015 ஜனவரி 08ஆம் திகதி ...
Read More »தமிழில் நகைச்சுவை எழுத்துக்குத் தேவை இருக்கிறது!- பேயோன்
பேயோன்! தமிழ் எழுத்தாளர்களின் மறைத்துவைக்கப்பட்ட அல்லது புதைத்துவைக்கப்பட்ட மனசாட்சி என்று அவர் நம்புகிறார் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், தான் யாருடைய பேயோனும் (Ghost-writer) இல்லை; என்னுடைய பேயோன்தான் என்று சொல்லக் கூடியவர். ‘பேயோன் 1000’ என்ற இவரது நூல்தான் அநேகமாக ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பாக வெளிவந்த முதல் நூலாக இருக்கக் கூடும். இவரது எதிர்கவிதைகள்(!) ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற பெயரில் முழுத் தொகுப்பாக வந்திருக்கின்றன. பேயோன் கணிசமான மின்னூல்களும் வெளியிட்டிருக்கிறார். பேயோனின் வலைப்பூ முகவரி: www.writerpayon.com யாருடைய பேயோன் (ghost-writer) ...
Read More »உலகின் தலைசிறந்த ஆசிரியராக அவுஸ்ரேலிய தமிழ் பெண்!
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.
Read More »தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை!
மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ...
Read More »