செய்திமுரசு

ஆஸ்திரேலிய முகாம்களில் அலைப்பேசிகளை தடைச்செய்யும் மசோதா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் அலைப்பேசி பயன்பாட்டை தடைச்செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசால் முன்மொழியப்பட்ட புலம்பெயர்வு திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஆஸ்திரேலிய மேலவையில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், இம்மசோதா முன்மொழியும் அலைப்பேசி தடை கனடா மற்றும் இன்னும் பிற நாடுகளில் மீள்குடியேற முயற்சிக்கும் அகதிகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது அகதிகள் மேலும் கூடுதலான காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் இதனால் ஆஸ்திரேலிய வரிப்பணம் பல மில்லியன்கள் செலவாகக்கூடும் என Ads-Up Refugee Network அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ...

Read More »

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல குழந்தைகள் உணவு கூட ...

Read More »

காவியுடைக் காடையர்களும் ஆட்சியின் காவலர்களா?

சில தினங்களுக்குமுன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் இலங்கையின் பௌத்த மக்களுட்பட மனிதாபிமானம் கொண்ட எந்த ஒரு பிரஜைக்கும் மிகக் கவலையையும், ஏன் ஆத்திரத்தையும் கொடுத்திருக்கலாம். மட்டக்களப்பு நகரின் மங்களறாமய விகாரையைச் சேர்ந்த அம்பிற்றிய சுமணரத்தன தேரர் என்ற ஒரு காவியுடை தரித்த நபர் தன்னை ஒரு பௌத்த துறவியெனப் பறைசாற்றிக் கொண்டு அரசாங்க தொல்லியற் திணக்கள அதிகாரிகள் மூவரை (இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்), அகழ்வாய்வுக்கென குறிவைக்கப்பட்ட ஒரு நிலத்தை அவர்கள் கனரக யந்திரத்தைக்கொண்டு தரைமட்டமாக்கினரென்று குற்றஞ்சாட்டி, அவர்களை அடித்துக் காயப்படுத்தி, ...

Read More »

பன்னாட்டுப் பொறுப்புக் கூறல் அமைப்பை இலங்கையில் ஐ.நா. நிறுவவேண்டும்

“இலங்கை அரசாங்கம் அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் (பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை

ஜெனீவாவில் நிஷா பீரிஸ் குற்றச்சாட்டு “நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ...

Read More »

நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது

நியூசிலாந்து நாட்டில் வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கி இருந்தபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அங்கு தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது. அங்கு பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1,477 என உலக சுகாதார நிறுவனம் ...

Read More »

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்ற ஆறு பேருக்கு நீதிமன்றில் வழக்கு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டு. தலைமையக காவல் துறை வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், ...

Read More »

வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு படையினர் அச்சுறுத்தல்

வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளரை பின்தொடர்ந்த இராணுவத்தினர் காணொளி எடுத்துள்ளதுடன் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர். தமிழ்கட்சிகளின் அழைப்பினை ஏற்று வடக்குகிழக்கில்முழுகதவடைப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அச்சுவேலி பகுதியில் படையினரும் புலனாய்வாளர்களும் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வலிகிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோசினை அச்சுறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டுள்ளனர். நானும் உபதவிசாளரும் அப்பகுதியில் கடை உரிமையாளர்களிடம் பேசியபோது அவர்கள் தங்கள் கடைகளை திறக்குமாறு படையினரும் காவல் துறையினரும் புலனாய்வாளர்களும் அச்சுறுத்தினர் என தெரிவித்தனர் என நிரோஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் பஜிரோ ரகவாகனத்தில் வந்த ...

Read More »

அச்சாப்பிள்ளை அரசியல் தான் நடக்கின்றதா?

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் ...

Read More »

தாயகத்தில் ஹர்த்தால்- யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு !

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “அரசினதும் அதன் படைகளின தும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப் படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்க மாட்டார்கள். தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபட ...

Read More »