நியூசிலாந்து நாட்டில் வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.
நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு வெளி இடங்களில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கி இருந்தபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் அங்கு தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது. அங்கு பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1,477 என உலக சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal