அவுஸ்திரேலியாவில், காட்டுத் தீயினால் படுகாயமடைந்த கோலா கரடிகள், சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்காரு தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 5,20,000 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலான நிலையில், கடுமையான தீ காயங்களுடன் 100 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மீட்கப்பட்டன. காயங்களுக்கு மருந்திட்டு, சத்தான உணவு வகைகளை வழங்கி கரடிகளை பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள், காயங்கள் குணமடைந்ததும், மீண்டும் அவைகளை வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர். கங்காரூ தீவில், கடந்த ஆண்டு 50,000 கோலா கரடிகள் இருந்த நிலையில், ...
Read More »செய்திமுரசு
பேலியகொட மீன் சந்தைக் கொத்தணிப் பரவலுக்குக் காரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக் காரணமாக இருந்த பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது எனச் சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.எனினும், அதனை மிஞ்சிய பேலியகொட மீன்சந்தைக் கொத்தணி கடந்த மாதம் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து பாரியளவில் வியாபித்துள்ளது.
Read More »மேல் மாகாணத்தில் திங்கட்கிழமை ஊரடங்கு நீக்கப்படும்
மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச்சட்டம் திங்கட்கிழமை நீக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கினை தொடரும் நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி பிறப்பித்து வருகின்றார், திங்கட்கிழமை ஊரடங்கை நீக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என மேலும் தெரிவித்தார்.
Read More »அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த நிலைப்பாடு மாறாது
அமெரிக்க தேர்தல் முடிவுகள் எவ்வாறானவையாக அமைந்தாலும் சீனா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடுகள் மாற்றமடையப்போவதில்லை என சீனாவிற்கான முன்னாள் இந்திய தூதுவர் கௌதம் பம்பவாலே தெரிவித்துள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றால் அவர் செயற்படும் விதத்தில் வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் சீனா குறித்த கொள்கையில் மாற்றங்கள் இருக்காது என முன்னாள் தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும் சீனா குறித்த கொள்கையும் அணுகுமுறையும் மாறப்போவதில்லை டிரம்பும் பைடனும் செயற்படும் விதத்தில் மாற்றங்கள் இருக்கலாம் ஆனால் கொள்கைகள் மாறப்போவதில்லை என அவர் ...
Read More »இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுக்கும் எச்சரிக்கை
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) சமூக வலைத்தளங்களில் இலவச டேட்டாக்களை வழங்குவதாகக் கூறி பரப்பப்படும் போலியான செய்திகள் குறித்து தமக்கு முறைப் பாடுகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்குள்ளாக்கும் இத்தகைய போலியான செய்திகள் குறித்து மேற்படி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமக்களை குறிப்பாக இணையத்தில்(Online) கற்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான செய்திகள் மல்வார் (malware) வைரஸை உங்களது கைத்தொலைபேசிகளில் நிறுவக்கூடும் என்றும் இதனால் ...
Read More »மன்னாரில் கிராம அலுவலர் மர்ம மரணம்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை காவல் துறையினர் தெரிவித்தனர். இவர் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது தலை மற்றும் உடல் பாகங்களில் பாரிய காயம் காணப்பட்டுள்ளதோடு அவர் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ...
Read More »அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வெற்றி பெற்ற திருநங்கை!
அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக் பிரைட் (வயது 31) வெற்றி பெற்று உள்ளார். ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான இவர் டெலாவேரில் வெற்றி ...
Read More »ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் காணாமல் போன அகதி
கடந்த வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் தடுப்பு முகாமிலிருந்து காணாமல் போன ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி எங்கே என ஆஸ்திரேலிய எல்லைப்படையிடம் அகதிகள் நல வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உடற்பயிற்சி கூடத்திலிருந்து காவலாளிகளால் ஈரானிய அகதி வெளியேற்றப்பட்டது முதல் அவரைக் காணவில்லை எனச் சொல்லப்படுகின்றது. ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அகதிகளின் நிலை குறித்து அவர் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்த ஒரு நபராக ஈரானிய அகதி பர்ஹத் ரஹ்மதி இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கடல் ...
Read More »மஞ்சள் ஆபத்தும் மஞ்சள் விலை கூடிய ஒரு குட்டித் தீவும்
யார் இந்து சமுத்திரத்தில் கடல்சார் மேலாண்மையை அடைகிறாரோ அவரே அனைத்துலக அரங்கில் முதன்மையான பாத்திரத்தை வகிப்பார்.யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துகிறாரோ அவர் ஆசியாவின் மீது ஆதிக்கத்தைக் கொண்டிருப்பார். இருபத்தியோராம் நூற்றாண்டில் எழு கடல்களுக்குமான திறப்பு இந்து சமுத்திரமே. இந்த எழு கடல்களுமே உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும். அட்மிரல் அல்பிரட் தயர் மகான்- Admiral Alfred Thayer Mahan “சுதத்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்காக நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம்.” ஜனாதிபதியின் அலுவவலகத்தில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் பொம்பியோ எழுதிய வசனங்களில் ஒரு ...
Read More »ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது: கங்குலி
காயம் குணமடைந்து உடற்தகுதியை நிரூபித்தால் கட்டாயம் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற முடியும். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. பின்தொடைப் பகுதியில் (ஹாம்ஸ்டிரிங்) ஏற்பட்ட காயத்தால் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் உள்ளார். பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய அணியில் இடம் பெற முடியும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவுடன் நாங்களும் அவர் ...
Read More »