ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே கண் எரிச்சல் தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அவர் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார். கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாக கூறினார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. எனவே கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ...
Read More »செய்திமுரசு
65 ஆண்டு கால கொரிய போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – தென்கொரியாவை வலியுறுத்தும் வடகொரியா!
கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது. எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ...
Read More »செம்மணி புதைகுழி விவகாரம்- காவல் துறை ஒத்துழைப்பில்லை!
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். காவல் துறை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை. மேலதிகஅகழ்வுப் பணிகளும் பரிசோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் கடந்த வெள்ளிக் கிழமை நிலம் அகழப்பட்டது. மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வெளித்தெரிந்தன. அகழ்வுப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. யாழ்ப்பாணம்காவல் துறையினரக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை யாழ்ப்பாண மாவட்ட நீதிவான் சதீஸ்கரன் நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்று பார்வையிட்டார். ...
Read More »திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும்!
எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது பல ஆயிரக்கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இச் செயற்பாடுகள் ...
Read More »புதின் கொடுத்த கால்பந்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள்?
ரஷிய அதிபர் புதின் டிரம்புக்கு பரிசாக கொடுத்த கால்பந்தை அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தியுள்ள நிலையில், அதில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருக்கலாம் என குடியரசு கட்சி செனட்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த 12-ம் திகதி பின்லாந்து நாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, புதின் டிரம்புக்கு கால்பந்து ஒன்றை பரிசளித்தார். பொதுவாக அமெரிக்க அதிபருக்கு வரும் எல்லா பரிசுப்பொருட்களும் சோதனைக்கு உள்படுத்தப்படுவது வழக்கம். தற்போதும் அதேபோல, அந்த கால்பந்தை பாதுகாப்பு ...
Read More »நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தினால் வட மாகாண சபையில் குழப்பம் எழாது!-
நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். நேற்று(21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு ...
Read More »யாழ்ப்பாணத்தில் 93 கடற்படை முகாம்கள், 54 இராணுவ முகாம்கள்!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன இயங்குவதோடு 18 காவல் துறை நிலையம் உட்பட 30 காவல் துறை அலுவலகம் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாழும் சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடியை நம்பியே வாழும் நிலையில் கடற்படையினரே அதிக இடங்களை அபகரித்து நிலைகொண்டுள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதிலும் குறிப்பாகக் குடாநாட்டைச் சூழ 93 முகாம்களில் ...
Read More »மூடி மறைக்க முயலும் செயற்பாடு!
தமிழ் மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்கணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்து உரையாடிவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஏற்ப யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலை உறவினர்கள் முற்றாக புறக்கணித்தது மாத்திரமன்றி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். காணாமல் போன தமது உறவுகளைத்தேடி மாதக்கணக்காக, வருடக்கணக்காக ...
Read More »விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம்!
நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் வர முன்னரே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிரந்தர உரிமையினை ஒருவருக்க வழங்குவதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவின் விழுமியங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே அவர் தேர்வுகளை எதிர்க்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரைக்கும் தற்போது உள்ள நடைமுறையின் படி சில வருடங்கள் வாழ்ந்த பின் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ...
Read More »நாயன்மார் கட்டுப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள்!
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. யுத்த காலத்தில், முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே, நேற்று (20) மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இருப்பினும், இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தின் நிலக் கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான ...
Read More »