செய்திமுரசு

தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகள் மகாநாயக்கர்களிடம்?

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,  தனது தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை, நாளை மறுநாள் கண்டியில் வெளியிடப்படும் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், கண்டியில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும்,  சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய தலைவர் அவர் என்றும், லக்ஸ்மன் ...

Read More »

மரண தண்டனைக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்திற்கு முன் உயர்நீதிமன்றம் மரணதண்டனை அமுலாக்கத்திற்கு இடமளித்தால் மரணதண்டனையை  நிறைவேற்றிவிட்டு செல்வேனென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அடுத்த பெரும் உலக சாதனை: கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்!

கேட் மெட்ஸ் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களால் கணக்கிட முடியாத வேகத்தில் கணக்கிடும் குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருப்பது அறிவியல் உலகைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1980-களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் இரவு பகலாக ஆராய்ந்துவரும் விஷயத்தில் கூகுள் எட்டியிருக்கும் சாதனை இது. செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபாட்டுகள் தயாரிப்பில் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் மிகப் பெரிய அளவில் பயன்படவிருக்கிறது. இதன் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: பாரம்பரியமான கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி இளைஞர் தூக்கத்தில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே மரணமடைந்த சம்பவம் தொடர்பில் அவரது மருத்துவரான தாயார் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். தமது மகன் இறந்ததற்கு காரணமான அந்த நிலை தொடர்பில் மருத்துவரான தமக்கு தெரிந்திருக்கவில்லை என்பது வெட்கக்கேடானது என அவர் கண்கள் கலங்க தெரிவித்துள்ளார். சிட்னியில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் Anny Marrett. இவரது 29 வயது மகன் ஜார்ஜ் என்பவரே தமது குடியிருப்பில் வைத்து தூக்கத்தில் மரணமடைந்துள்ளார். இளைஞர் ஜார்ஜுக்கு 14 வயது முதலே வலிப்பு நோய் பாதிப்பு இருந்து ...

Read More »

5 கட்சிகளின் இறுதி முடிவு நாளை மறுதினம் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதற்கான இறுதி முடிவினை நாளை மறுதினம் 30 ஆம் திகதி எடுக்கவுள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதற்கான 5  தமிழ்அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை ...

Read More »

இலங்கையில் தேர்தல் திரிசங்கு நிலை!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இன்னும் 3 வாரங்களில் வாக்களிக்கவிருக்கிறார்கள். மொத்தம் 35 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலேயே பிரதான போட்டி நிலவுகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) அநுரகுமார திஸாநாயக்கவும் சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவிற்கு இணங்க முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் அடுத்த இரு முக்கிய வேட்பாளர்களாவர். பிரதான கட்சிகளுக்கு ஒரு மாற்றாக இவர்கள் களத்தில் நிற்கிறார்கள். ...

Read More »

கோத்தாவுக்கு எதிரான பெளஸியின் உரை !-காவல் துறை விசாரணை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி மக்களை குழப்பும் வகையில் ஆற்றியதாக கூறப்படும் உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் காவல் துறையினர் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் கிராண்பாஸ் காவல் துறை  விஷேட அறிக்கை ஊடாக கொழும்பு பிரதான நீதிவான்  நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாலத்துறை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.இதன்போதே பெளஸி மக்களை குழப்பும் வகையில் ...

Read More »

காஷ்மீருக்கு ஆதரவாக புனிதப்போர் நடத்தினால் பாகிஸ்தானுக்கு எதிராகி விடும்!

இந்திய படைகளுக்கு எதிராகவும், காஷ்மீரில் ஆயுதங்கள் ஏந்தி போராடி வருபவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது காஷ்மீர் மக்களுக்கும், இஸ்லாமாபாத்துக்கும் எதிரானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததிலிருந்து பாகிஸ்தான் கடும் அதிருப்தியுடன் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வரும் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் ...

Read More »

சாகசத்தில் ஈடுபட்ட போது நடுக்காட்டில் அறுந்த கயிறு!

அவுஸ்திரேலிய மலைக்காட்டில் ஜிப்லிங் எனப்படும் சாகசத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கயிற்றில் இருந்து தவறி விழுந்ததில் கணவர் பலியானதுடன் அவருடைய மனைவி படுகாயமடைந்துள்ள சோக சம்பவம் நடந்தேறியுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த டீன் சாண்டர்சன் (50) தனது மனைவி ஷானனுடன் (48) இராணுவ அகாடமியில் உள்ள தங்கள் மகனைப் பார்க்க பிரிஸ்பேனிற்கு சென்றிருந்தனர். ஜிப்லிங் எனப்படும் சாகசத்தில் ஈடுபட சாண்டர்சன் ஆசைப்பட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் கெய்ர்ன்ஸுக்கு வடக்கே கேப் உபத்திரவத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஜிப்லிங்கில் ஈடுபட்டனர். 16மீ தூரம் மட்டுமே சென்றிருந்த போது திடீரென கயிறு அறுந்து ...

Read More »

போட்டியிலிருந்து விலகப்போவதுமில்லை ஏனையோருடன் இணையப்போதுமில்லை!

ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க வேறெந்த தரப்புக்களுடன் இணைவதற்குரிய பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அடுத்து வரும் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள மகேஷ் சேனாநாயக்க மற்றும் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் தம்முடன் இணைத்துகொள்ளவுள்ளதாகவும் அதற்குரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் ஜனாதிபதி ...

Read More »