ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்ட அகதிகளுக்கு பிறந்த சுமார் 170 குழந்தைகள் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் 125 குழந்தைகள் ஆஸ்திரேலியாவிலும் மற்ற குழந்தைகள் கடல் கடந்த தடுப்பு தீவுகளிலும் பிறந்தவை எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு சமீபத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் அல்லது இக்குழந்தைகளில் எத்தனை பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலை வழங்க ஆஸ்திரேலிய உள்துறை மறுத்திருக்கிறது. நவுரு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு சுமார் 7 ஆண்டுகாலத்தில் பிறந்த இக்குழந்தைகள் ஆஸ்திரேலிய படகு ...
Read More »செய்திமுரசு
ஒரு புதிய யாப்புக்கான வாய்ப்புக்கள்?
ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் யாப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய யாப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு வருவோம் ...
Read More »ஆஸ்திரேலியா: தொண்டு அமைப்புகளின் உதவிகளை நாடும் தஞ்சக்கோரிக்கையாளர்கள்
கொரோனா பெருந்தொற்று சூழல் தொடங்கிய பொழுது, அரசு உதவிகளிலிருந்து தவிர்க்கப்பட்ட சுமார் 1 லட்சம் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வீடற்ற நிலையையும் பசியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் என தொண்டு அமைப்புகள் எச்சரிந்திருந்த நிலையில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அதனை நிரூபணமாக்கியுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் நடத்திய ஆய்வில் 3,500 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொண்டு அமைப்புகளின் உதவிகளை நம்பியிருப்பதாகவும் அதில் 70 சதவீதமானோர் போதிய உணவின்றி தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் படி, சுமார் 14 சதவீதமானோர் வீடற்ற நிலையையும் எதிர்கொண்டுள்ளனர். அதே சமயம், ...
Read More »அமெரிக்காவுடன் இணைந்து செயற்படத் தயார் -சீனா
அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ(Wang Yi), இருநாடுகளுக்கான பொது நலன்களை மறந்துவிட்டுச் சீனாவை அமெரிக்கா கடுமையாக விமர்சித்ததால் உறவு மோசமடைந்ததாகக் குறிப்பிட்டார். கொரோனா, பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், இனச் சமத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக ஜோ பைடன் கூறியதை வாங், சுட்டிக்காட்டினார்.
Read More »ஆவணத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வரும் மார்ச் மாத அமர்வை ஒட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும் பொய்யான, விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர் என தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “நான் அவர்களுக்குக் கொடுத்த ஆவணத்தில் இரண்டே இரண்டு விடயங்கள் தான் இருக்கின்றன. ஒன்று – இதுவரை ஐ.நா. மனித ...
Read More »முஸ்லீம்களின் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள்
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன ஆங்கில இணையத் தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேதஅறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இறுதிசடங்குகள் முடிவடையும் வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது ...
Read More »மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்”
புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ...
Read More »கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கினார்!
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட தாதியொருவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை டென்னிசி பகுதியைச் சேர்ந்த டிஃபனி டோவர் (Tiffany Dover ) என்பவர் முதல் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிஃபனி, தனக்கு செலுத்தப்பட்ட ஊசி குறித்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தனக்கு உடல் நலம் பாதித்ததாகக் கூறி பாதியில் எழுந்து சென்றார். ஆனாலும் ஓரிரு அடி எடுத்து வைப்பதற்குள் மயங்கிச் சரிந்தார். ...
Read More »அவுஸ்திரேலியாவில் புதிய பரவல் ஆரம்பமானது எப்படி?
நியுஸ்சவுத்வேல்சில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரசிற்கு காரணமான பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக புதிய பரவல் குறித்த உண்மை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதான தொற்றாளரை அடையாளம் காணமுடியாத நிலை காரணமாக எதனையும் உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக நியுசவுத்வேல்சின் பிரதம வைத்திய அதிகாரி கெரி சன்ட் தெரிவித்துள்ளார். பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்காமல் கொரோனா பரவுவதற்கான வழியை தடுத்துவிட்டோம் என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நியுசவுத்வேல்ஸ் இரண்டுவிதமான பரவலை எதிர்கொள்கின்றது ...
Read More »வவுனிக்குளத்திற்குள் வாகனம் விழுந்ததில் இரண்டு வயது சிறுமி உட்பட மூவர் பலி
வாகனம் குளத்திற்கு வீழ்ந்ததன் காரணமாக இரண்டரை வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளனர். வவுனிக்குள வீதிவழியாக பயணித்த வாகனம் குளத்திற்குள் விழுந்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வவுனிக்குளம் செல்வபுரம் பகுதியில் வசிக்கும் தந்தை அவரது இரண்டரை வயது மகள் அயல்வீட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் மகன் நீந்திகரைசேர்ந்துள்ளான் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதின்மூன்று வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தந்தை மகளின் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
Read More »