செய்திமுரசு

நீதிமன்றில் முன்னிலையானார் முன்னாள் நீதியரசர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ...

Read More »

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை !

வேறு எந்த நாட்டின் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செடம்பர் 6-ம் திகதியை பாதுகாப்பு தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது. பின்னர் இதன் பெயரை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவாக கடந்த 2014-ம் ஆண்டு மாற்றியது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழா, ராவல்பிண்டியில் ...

Read More »

ஜப்பானுக்கு உதவியாக ரோந்து விமானங்களை அனுப்பிய ஆஸ்திரேலியா!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை மீறி நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக 3 ரோந்து விமானங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அனுப்பியுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு அந்நாட்டின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) ...

Read More »

வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை சிறிலங்கா அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் சிறிலங்காவுக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று (6) முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் ...

Read More »

சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள்! -டிலான்

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் கட்சியில் இருக்கும் ஏனையவர்களும் வெளியேறிவிடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு முடியாது. அதனால் கட்சியின் வருடாந்த ...

Read More »

அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சி!- நியூயார்க் டைம்ஸ்

டிரம்பின் மோசமான நிர்வாகத்தில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற மூத்த நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே புகார் கூறி வருகிறார்கள். சொந்த கட்சியிலும் கூட இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான நியூயார் டைம்ஸ் இதழில் இது ...

Read More »

மிதிவெடி வெடித்ததில் கணவன் மரணம்! மனைவி தற்கொலை முயற்சி!

மாங்குளம் பிரதேசத்தில் கடந்த தினத்தில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். மிதிவெடி அகற்றும் சர்வதேச நிறுவனமொன்றின் கீழ் பணிபுரிந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் மனைவி விஷம் அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கணவரின் திடீர் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Read More »

வீடியோ கேம்ஸ் விளையாடுவதை தடுத்த தாய்! தாக்கிய மகன்!

அவுஸ்திரேலியாவில் 14 வயது சிறுவன், வீடியோ கேம் விளையாடுவதைத் தடுத்த தாயை தலையில் பலமாக தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வமுள்ள நிலையில் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான். கேமின் சுவாரஸ்யத்தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப்பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமையாகவே மாறியுள்ளார். ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக்கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கியுள்ளார். ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தாய் பொலிசாரை அழைத்ததையடுத்து, ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஈழ அகதி விபத்தில் பலி!

சிட்னியில் உள்ள Pendle Hill பகுதியில் உள்ள Gilba Road இல் புதன்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த “ட்ரக்” மோதியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

Read More »

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை!

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு நீதிகோரி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த கமீர் நிஜாப்தீனுக்கு நீதி கோரியே கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் change.org இணையத்தளத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த முகாந்திரமும் இல்லாமல் குறித்த இலங்கையர் கைது செய்தது மட்டுமல்லாமல், உரிய சட்ட வசதிகளை மறுத்தும், அவர் குறித்த செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு வருகின்ற அரச ...

Read More »