வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த மாதம் 08 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்தே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.