செய்திமுரசு

நாடாளுமன்றம் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படும்!- மஹிந்த

நாடாளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மீண்டும் 5 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்காக ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Read More »

`புலியின் எலும்புகளையும் காண்டாமிருகத்தின் கொம்புகளையும் விற்கலாம்’ – சீனா புதிய கொள்கை!

உலகம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் வேளையிலே, அதிகம் வீழ்ச்சி காணுவது இயற்கைதான். அவ்வகையில் மிக அதிகமாகப் பாதிப்படைந்து வருவது விலங்குகள். அழிக்கப்படும் காடுகள் ஒருபக்கம் என்றால், நேரடியாகக் கொல்லப்படுவதும் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. வனவிலங்குகள் அழிவது என்பது அந்த இனத்திற்கான அழிவு மட்டுமல்ல, உயிரினங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கலந்து வாழும் இந்தப் பூமியில், ஒரு இனத்தின் அழிவு என்பது, நீண்டபெரும் உணவு சங்கிலியின், ஒரு இணைப்பு துண்டிக்கப்படுவது ஆகும். இது இயற்கை, உருவாக்கிய உலகம், அதைச் சார்ந்த மனிதன் ...

Read More »

துஸ்பிரயோகம் செய்ய முயன்றவனை குத்திக்கொன்ற பெண்!

அவுஸ்திரேலியாவில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை குத்தி கொலை செய்த பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த கிராண்ட் காசர் (51) என்ற நபர் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கடந்த 2015ம் ஆண்டு ரோக்ஸான் பீட்டர்ஸ் (35) என்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காசரின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருடை மர்ம உறுப்பு, உணவுக்குழாய் மற்றும் நெஞ்சுப்பகுதி போன்ற இடங்களில் 60 கத்திக்குத்து காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். ...

Read More »

21 வயது குறைவான வாலிபரை மணக்க போகும் 9 குழந்தைகளின் தாய்!

அவுஸ்திரேலியாவில் 9 குழந்தைகளுக்கு தாயான பெண் தன்னை விட 21 வயது குறைவான இளைஞரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார். டினா ஜாக்சன் (45) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 9 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிராண்டன் (24) என்ற இளைஞரை கடந்த 2013-ல் டினா சந்தித்துள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர். பின்னர் இது காதலாக மாறியுள்ளது. பிரண்டனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக டினா மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அழகான குழந்தையை சமீபத்தில் பெற்றெடுத்தார் டினா. தனது காதலனான பிராண்டனை விரைவில் டினா திருமணம் செய்யவுள்ளார். ...

Read More »

அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!

நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது.    மக்கள்  ஆணையைப்  பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, மக்களின் இறைமையைப் பாதுகாக்கின்ற, பொறிமுறைகள் மீதான தாக்குதலும் ஆகும். மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறிமுறைகளில், நாடாளுமன்றமும் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் பிரதானமானவை. ஜனாதிபதிப் பதவியும் அதன் ஒரு வடிவமே. ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது, அரசமைப்புக்கு முரணான வகையில் தலையீடுகளைச் செய்வதன் ...

Read More »

மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!

பத்திரிகையாளர்கள் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் இடம்பெறு உள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வெளியிட்டு உள்ள  அறிக்கையின்படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மீண்டும் ஒருமுறை இடம்பெற்றது. 11 வது வருடமாக இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறுகிறது. இதில் இந்தியா 14 வது இடத்தி பெறுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கொலையில்  தீர்க்கப்படாத 18 வழக்குகள் உள்ளதாக குறிப்பிடபட்டு உள்ளது. இந்த பட்டியலில் சோமாலியா முதலிடத்தில் ...

Read More »

மைத்திரியை அடுத்து சம்பந்தனை சந்தித்தார் ஐ.நா பிரதிநிதி !

சிறிலங்காவுக்கான  ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இச் சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையுள்ளார். இதேவேளை,  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், ...

Read More »

நாடாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் விசேட திட்டம்!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக  நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு இணங்காவிட்டால் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்த இறுதி முடிவையெடுப்பதற்கு முன்னதாக இன்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்தி;ப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என  தெரிவிக்கின்றனர் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. NSW மாநிலத்தில் புதிதாக 5 மொழிகளை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்கலாம் என NSW மாநில அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த 5 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தமிழ் மொழிக்கான பாடத்திட்டத்தை NSW மாநில கல்வித்துறை வடிவமைத்துள்ளது. அத்தோடு இந்த பாடத்திட்டத்தை அரசு அங்கீகரிக்கும் முன் இந்த பாடத்திட்டம் குறித்து தமிழ் சமூகம் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமெனவும் அரசு கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More »

இத்தாலியை தாக்கிய புயல்- வெனிஸ்நகரம் வெள்ளத்தில்!

ஐரோப்பிய நாடான இத்தாலியை கடுமையான புயல் தாக்கியது. புயல் காரணமாக வெனிஸில் பெய்த பலத்த மழையால் நகரம் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று கடுமையான புயல் தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற்று வீசியது. கடும் மழையும் கொட்டியது காற்றில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். சவோனோ என்ற இடத்தில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மேலும் 2 பேர் ...

Read More »