செய்திமுரசு

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் இருந்து அருகில் உள்ள சிலாயர் தீவுக்கு படகில் 139 பேர் சென்றுள்ளனர். கரையில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்பட 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 74 பேர் உயிருடன் ...

Read More »

ஆஸ்திரேலிய பேராயருக்கு 12 மாதம் சிறை!

1970களில் பாலியல் தேவைகளுக்கு தேவாலயச் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிலிப் வில்சன் என்ற அந்தப் பேராயர் குற்றவாளி என்று ஒரு ஆஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. தற்போது அவர் 12 மாதம் சிறைவைக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தண்டனையை அனுபவிக்க அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க வாய்ப்பு உள்ளது என்றும் மேஜிஸ்திரேட் கூறியுள்ளார். எனவே, அவர் 12 மாதமும் வீட்டுச் ...

Read More »

வடக்கில் சட்டத்தை அமுல்படுத்த கூட்டமைப்பே தடையாகவுள்ளதாம்!

வடக்கில் சட்ட ஒழுங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வட மகாண சபை உறுப்பினர்களுமே தடையாக உள்ளனர் என அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிழக்கில் விடுதலை புலிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைத்தோங்க வேண்டும் அப்போதே தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும் என்று சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் வடக்கில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சிறுவர் துஷ்பிரயோகங்களும் வன்கொடுமைகளும் நாளாந்தம் இடம்பெற்றதாகவே ...

Read More »

பிஸ்கட் கொடுத்தே சிறுமி ரெஜினாவை காட்­டுக்கு அழைத்து சென்றனர்!!

வட்­டுக்­கோட்டை காவல் துறை பிரி­வுக்கு உட்­பட்ட சுழி­புரம் பகு­தியில் கொல்­லப்­பட்ட 6 வயது சிறுமி சிவ­னேஷன் ரெஜினா, திட்­ட­மி­டப்­பட்டு காட்டுப் பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. கொல்­லப்­பட்ட சிறு­மியின் சித்­தப்பா உறவு முறை­யி­லான 22 வய­து­டைய பிர­தான சந்­தேக நப­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களைத் தொடர்ந்து இவை வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத­னை­ய­டுத்தே கொல்­லப்­பட்ட சிறு­மியின் மாமா உறவு முறை­யி­லான 17, 18 வய­து­களை உடைய இரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக அந்த அதி­காரி மேலும் கூறினார். பின்னர் கைது செய்­யப்­பட்ட இந்த மாமா உறவு ...

Read More »

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் வடகொரியா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. அப்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேசினர். இதையடுத்து, வடகொரிய அதிபர் தங்களது நாட்டில் செயல்பட்டு வந்த அணு சோதனை மையங்களை மூடினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ ஜூலை 5-ம் திகதி வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ...

Read More »

இரட்டைக் குடியுரிமையும், இல்லாமல் போன உரிமையும்!

இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன? அது எப்படி எடுக்கப்படுகிறது? அதனை எப்படிக் கைவிடலாம்? கைவிடுவதென்றால் எந்த நாட்டுக் குடியுரிமையைக் கைவிடலாம்? என்பது பற்றியெல்லாம் எந்தவிதத் தெளிவும் இல்லாமல் சில ஊடகங்களில் செய்திகள் என்ற பெயரில் தகவல்கள் வெளிவருகின்றன. அப்படிச் செய்ய முடியும், இப்படிச் செய்யமுடியாது, அந்தநாடு விடாது, இந்தநாடு அனுமதிக்காது, அவரால் கைவிடவே முடியாதாம், இவரால் இரண்டுமாதங்களில் கைவிட முடியுமாம் என்றெல்லாம் நக்கலாகவும், நகைச் சுவையாகவும்கூடச் சில செய்திகளைப்பார்க்கிறோம். அதனால், இரட்டைக் குடியுரிமை பற்றிய சில விடயங்களையும், இலங்கை அரசியலில் அதன் தார்ப்பரியங்களையும் பற்றிச் ...

Read More »

அவுஸ்திரேலியா-இந்தியா நேரடி விமான சேவை அதிகரிக்கப்படுகிறது!

அவுஸ்திரேலியா- இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கிடையில் சமீபத்தில் இதுகுறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்திய சுற்றுலாப் பயணிகளினால் அவுஸ்திரேலியாவுக்கு பாரியளவிலான வருமானம் கிடைத்துவரும் வருவதாகவும் இதனால் இருநாடுகளுக்கும் இடையில் அதிகளவிலான விமான சேவைகள் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது Air India விமான நிறுவனமும், codeshare airline Jet Airways-உடன் இணைந்து Qantas நிறுவனமும் ...

Read More »

பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள்!

வேகமான வாழ்க்கை முறையால் தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண் வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் கல்சியம் கார்பைடு என்னும் இரசாயனம்தான்என கண்டறியப்பட்டுள்ளது.அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் காய் பிஞ்சுகளைமுற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன்என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் ...

Read More »

தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழுச்சியுடன் உருவாக வேண்டும்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழுச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார். அரச தலைவரின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More »

கால்கள் இன்றி பிறந்த மகளை நடக்க வைத்த அப்பா!

சிரியாவில் பிறவியிலேயே கால்கள் இன்றி முடங்கி கிடந்த தனது குழந்தைக்கு வெளியுலகை காட்டி நடக்க வைத்த தந்தையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள அலெப்பி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது மெர்கி (34). இவரது மகள் மாயா மெர்கி (8). இவள் கால் இன்றி பிறந்தாள். பிறவியிலேயே இவளுக்கு முழங்காலுக்கு கீழ் பகுதி இல்லை. எனவே இவலால் நடக்க முடியவில்லை. வெளி உலகை காண முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்பி பகுதியில் இருந்து ...

Read More »