செய்திமுரசு

மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் தொடர்கின்றது!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இன்று(18) காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் மேலும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ...

Read More »

`எல்லைக் கோடுகள் நாடுகளுக்குத்தான், அன்புக்கு அல்ல’ !

`அம்மா! ஐ லவ் யூ. நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன். ப்ளீஸ் அம்மா! என்கிட்ட எப்படியாவது பேசுங்க. நீங்க நல்லா இருக்கீங்கனு நம்புறேன். அம்மா! ஞாபகம் வெச்சுக்கோங்க, என் வாழ்க்கைல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் நீங்கதான். “என் அம்மாகிட்ட கூட்டிட்டு போறாங்கன்னுதான் நெனச்சேன், ஆனா வேற ஒரு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க” “நான் பாத்ரூம் கழுவுனேன். கழிப்பறைக் குப்பைகள் நெறைஞ்ச அந்தப் பையை எடுத்துப் போடச் சொன்னாங்க. எல்லாருமே அந்த வேலைய செய்யணும்.” “என் தம்பி அழுதுட்டு இருந்தான். அவன தூக்கி ...

Read More »

குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐநா கோரிக்கை!

அண்மையில் நாடுகடத்தபட்ட தீலீபன் என்ற இளைஞரின் சம்பவத்தை சுட்டிகாட்டியுள்ள ஐநா அகதிகளுக்கான நிறுவனம், குடும்பங்களை பிரிக்கும் நாடுகடத்தலுக்கு கவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசிடம் குறித்த இளைஞரை நாடுகடத்தவேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட போதும், தங்களால் அந்த நாடுகடத்தலை தடுக்கமுடியாமல் போனமை கவலை அளிப்பதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் இத்தகைய குடும்பங்களை பிரிப்பது, அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் அகதிகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: UNHCR, the UN Refugee Agency, ...

Read More »

கனடாவின் மார்க்கம் நகரத்தில் வன்னி வீதி Vanni Ave

கனடாவின் மார்க்கம் நகரத்தில் வாழும் தமிழர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வீதி ஒன்றுக்கு வன்னி வீதி (Vanni Ave) என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்க்கம் நகரத்திற்கும் முல்லைத்தீவு நகரத்திற்குமான நட்புறவு உடன்படிக்கை ஒன்று செய்யப்பட்ட நிலையில் இவ்வீதி திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

விசா நிராகரிக்கப்படுவோர் விரைவான நடவடிக்கை எடுப்பது அவசியம்!

அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சகோரிக்கை விண்ணப்பங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக நிராகரிக்கப்பட்டுவருகின்றது. இன்று மனைவிக்கும் மகளுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில் திலீபன் என்ற 30 வயதுடைய இளைஞர் ஒருவர் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். குறுகிய காலஅவகாசம் வழங்கப்பட்டே இத்தகைய நாடுகடத்தல் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதால் போதிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் கிடைப்பதில்லை என அகதிகளுக்கான சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக தமிழ்ச்சமூக செயற்பாட்டாளர்களையோ அல்லது அகதி தஞ்சகோரிக்கைகளை கையாளுகின்ற சட்டவாளர்ளை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை ...

Read More »

விஜயகலாவின் உரை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை!

சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். உத்தியோகபூர்வப் பணி ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை 02 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவ்விழாவில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாகவேண்டும்” எனக் கூறியிருந்தார். அந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு இருந்ததுடன், ...

Read More »

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட தீலிபன்!

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை ...

Read More »

இன்று 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியது!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற 18 பேர் தனி விமானம் மூலம் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுடன் அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். A-319 எயார் பஸ் மூலம் 160 பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றிலேயே குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய ...

Read More »

குறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்

தருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில் தக்காளி செடிவைத்து அதிக மகசூல் எடுத்து வரும் பட்டதாரி இளைஞர்கள். தருமபுரி மாவட்டம் பாலக்கொடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி ராஜதுரை. இவர் ஆஸ்திரேலியாவில் பண்ணை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது கிராமத்தில் விவசாயத்தை தொடங்கலாம் என நினைத்து தனது தம்பிகளான சோலைராஜன், புவனேஸ்வரன், சூர்யாபிரகாஷ் ஆகிய இளைஞர்கள ஒருங்கிணைத்து நச்சுத்தன்மை இல்லாமால், இயற்கை முறையிலும், அதிக மகசூல் பெறும் வழியினை மேற்கொள்ள ...

Read More »

கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ?

வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் ...

Read More »