செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளரின் மரணம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்த பின்னணியில் கடந்த 6 வாரங்களுக்குள் அங்கு இடம்பெற்றுள்ள 2வது உயிரிழப்பு இதுவெனக் கூறப்படுகிறது. ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சடலமாக தனது அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் ...

Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்!- ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலாரி தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் 2020ம் ...

Read More »

புஷ்வாணமாகும் கோரிக்கைகள்!

சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிப்போயிருக்கும் தீர்வு விடயங்களில், முன்னேற்றம் காணப்படுகிறதா என்பது சந்தேகம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் கோரி நிற்கும் தீர்வு, அவர்களது அபிலாஷைகள்,   யுத்தத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வு என்பனவற்றை நிவர்த்திக்கும் வகையிலானதாக அமைதல் என்பது, தென்னிலங்கை அரசியல்ப் போக்கைப் பொறுத்தவரையில் சாத்தியமானதொன்றாக அமைய முடியுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது. ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கை தேசத்தில் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படும் நிலையில், இதன் விழுமியங்களைக் காப்பதற்கு, ஏதுவான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பது தொடர்பில், சிந்திக்க வேண்டும். ...

Read More »

பாதீடு தோல்வியடைந்தால் பதவி விலகவேண்டும்!

இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்லை இலக்கு வைத்தே  அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

கண்ணகிபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியல் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்து காவல் துறை  நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைவாகவே மேற்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

Read More »

ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?

புல்வாமா தாக்குதலை ஒரு விபத்து என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பதிலடி தரும் வகையில் ‘ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என மத்திய மந்திரி வி.கே. சிங் கேள்வியெழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான திக்விஜய் சிங். சர்ச்சை கருத்துகளால் அவ்வப்போது அக்கட்சியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுவதுண்டு. அவ்வகையில், தற்போது புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என அவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து பொதுமக்களிடையில் கொந்தளிப்பை உண்டாக்கியதுடன் அரசியல்  வட்டாரத்திலும் ...

Read More »

சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்ரேலியா வரத்தடை!

உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி டேவிட் கோல்மேன் கூறுகையில், “உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்” என கூறினார். ...

Read More »

இறங்குமுகம்! – பி.மாணிக்கவாசகம்

அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களின் போராட்டம் ஒரு சந்தியில் வந்து தேக்க நிலையை அடைந்துள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்த ஓர் அரசியல் போராட்டத்தின் இந்த நிலைமை கவலைக்குரியது. பல வடிவங்களில் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ள இந்தப் போராட்டத்தைப் பலதரப்பட்ட தலைவர்கள், பல்வேறு நிலைகளில் பல்வேறு வழிமுறைகளில் வழிநடத்தியிருக்கின்றார்கள். அந்த வழிநடத்தல்களும்சரி, முன்னேற்றமும்சரி, போராட்டத்தின் இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணிப்பதற்கு உற்சாகமூட்டுவதாக அமையவில்லை. போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்டத்தின் இலக்கு மாறவில்லை. கொள்கையில் மாற்றமில்லை என்ற போராட்டத்தின் இருப்பு குறித்த இறுமாப்பான குரல்கள் ...

Read More »

சிறிதரன் வழியில் அங்கஜனது குழுவும் அடாவடி!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குச் சொந்தமான கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தினரால் இன்றும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கேபிள் ரி.விக்கான மின்கம்பங்கள் நாட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது அவற்றினை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த ஊடகவியலாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டடுள்ளார். அவரை அச்சுறுத்தும் வகையில் குறித்த மின்கம்பங்களை நாட்டிக்கொண்டிருந்தவர்கள்  காணொளி பதிவுகளும் மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கேபிள் ரி.விக்கான கம்பங்கள் நாட்டப்பட்ட ...

Read More »

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்போராட்டம் குறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்காக அணி திரளுமாறு பொது அமைப்புகள் மற்றும் மதகுருமாரை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளதுடன், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான ...

Read More »