செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக்கன்றுகள் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக் கன்றுகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.   கடந்த வருடம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5000 பசுக்கன்றுகளில் 200 பசுக்கன்றுகளே உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் திட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்கஷவினால் கடந்த ...

Read More »

இந்தியக் குழந்தைகளுக்காக காத்திருக்கும் ஆஸ்திரேலிய தம்பதிகள்!

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயதாகும் எலிசபெத் புரூக் மற்றும் அவரது கணவர் 32 வயதாகும் ஆடம் புரூக் ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தை அந்நாடு இந்தியாவுடன் மீண்டும் தொடங்கவுள்ளது. எலிசபெத்தின் 14ஆம் வயதில் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ரோம் (polycystic ovarian syndrome) எனும் கருப்பை கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனும் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் ‘ராஜா ஹிந்துஸ்தானி’ இந்தி திரைப்படத்தை அவர் ...

Read More »

விச பால் உறுதியானால் கடும் தண்டனை!

கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசம் கலந்த பால் பக்கெட் கொடுக்கப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படும் என காவல் துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த பால் பக்கெட் கொழும்பு யுனியன் பிளேஸில் வைத்து வழங்கப்பட்டுள்ளமை அறியவந்துள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் காவல் துறை மா அதிபர் லலித் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read More »

சிறிலங்கா படையினர் உசார்நிலையிலேயே உள்ளனர்!-இராணுவ தளபதி

சிறிலங்கா இராணுவத்தினரின் தற்போதைய உசார் நிலை குறித்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் முன்வைத்துள்ள விமர்சனங்களை இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க நிராகரித்துள்ளார். ஓய்வுபெற்றவர்களால் இராணுவத்தின் தற்போதைய நிலையை மதிப்பிடமுடியாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். அவர்களிற்கு அதற்கான தார்மீக உரிமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவின் போது காணப்பட்ட முகாம்களை புதிய இடத்தில் மாற்றுவதையோ அல்லது புதிய இடத்தில் அமைப்பதையோ பலவீனமான விடயமாக கருதமுடியாது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். களநிலைமைகளை கருத்தில்கொண்டு கட்டளை தளபதிகளின் உத்தரவிற்குஏ ஏற்ப அவ்வாறான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை ...

Read More »

அரவணைப்பே தற்கொலைக்கான தடுப்பு மருந்து!

தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம். புரிந்துகொள்ளவே முடியாதது’  என்கிறார் உளவியல் மருத்துவர் கே. ரெட்ஃபீல்டு ஜேமிசன். உலகில், சாதாரண மனிதர்கள் முதல்  சாதனை நிகழ்த்தியவர்கள் வரை தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நீளமானது. தற்கொலை எண்ணம் உருவாவதற்கான காரணங்கள், நபர்களைப் பொறுத்து வேறுபட்டாலும், நடக்கும் எந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வாகவே தற்கொலை முடிவுகள் நம்பப்படுகின்றன என்கின்றன உளவியல் ஆய்வுகள். ஒருவருக்கு வேலைப் பளுவால் ஏற்படக்கூடிய அழுத்தம் தற்கொலைக்குக் காரணமாக இருக்கிறது என்றால், வேலையில்லாத விரக்தி இன்னொருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைகிறது. சமீபகாலமாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் ...

Read More »

ஏவுகணைகள் இல்லாத ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங்!

அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் ராணுவ அணிவகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் அன்னை பாராட்டி டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் திகதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும். இந்த ஆண்டு, 70-வது ஆண்டு விழா, வடகொரியாவில் எப்படி அமையப்போகிறது ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் ...

Read More »

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் 21 வயதுடைய இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞன் நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு பின்புறமாக காணப்படும் பாவனையற்ற வளவில் உள்ள மரம் ஒன்றிலே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். அவ்விடத்தில் ஆடு மேய்க்க சென்ற நபரொருவர் இவ் சடலத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக பொதுமக்கள், கிராம சேவையாளர் , காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் காவல் துறை ...

Read More »

மகிந்த இப்பொழுதும் பலமாக இருக்கிறாரா?

கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன் பலத்தைக்காட்டுவது இது மூன்றாவது தடவை. கடந்த மே தினத்தன்று காலிமுகத்திடலை அவர் தனது ஆதரவாளர்களால் நிறைத்தார். அது ஒரு பிரமாண்டமான சனத்திரள். அதன்பின் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அவர் தன் பலத்தைக்காட்டியிருந்தார். இந்த வரிசையில் பார்த்தால் கடந்த புதன்கிழமை அவர் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டம் ஏறுமுகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அப்படி அமையவில்லை. கொழும்பிற்கு வெளியிலிருந்து ஆயிரக் கணக்கானவர்களை அவர்களால் திரட்ட ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய விசா!

தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய விசா ஒன்று அறிமுகம் செய்ய அரசு முனைப்புக் காட்டியுள்ளது. இந்தப் புதிய விசா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக 4 லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விசாவில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதேவேளை அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ...

Read More »