கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசம் கலந்த பால் பக்கெட் கொடுக்கப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கப்படும் என காவல் துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவல் துறைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த பால் பக்கெட் கொழும்பு யுனியன் பிளேஸில் வைத்து வழங்கப்பட்டுள்ளமை அறியவந்துள்ளதாக கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் காவல் துறை மா அதிபர் லலித் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal