விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான அதிநவீன சமையல் சாதனத்தை சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர். அவர்கள் பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான மாவு, ‘மைக்ரோவேவ் அவன்’ (அதிநவீன சமையல் சாதனம்) ஆகியவை அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் ...
Read More »செய்திமுரசு
பாம்பு பிடிப்பவரை ஆக்ரோஷமாக துரத்திய பாம்பு!
அவுஸ்திரேலியாவில் பாம்புகளைப் பிடிப்பவர் ஒருவரை கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று ஆக்ரோஷமாக துரத்திய நிலையிலும், அவர் அதற்கு ஆதரவாக பேசியுள்ளார். வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் அந்த பாம்பு அவரை ஆக்ரோஷமாக துரத்துவதைக் காண முடிகிறது. தரையிலிருந்து சில அடி உயரத்திற்கு எழும்பி அது அவரைத் துரத்துவதுடன், வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, நச்சுப் பற்கள் தெரிய அவரை கொத்தவும் பாய்கிறது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Tony Harrison (52) என்னும் அந்த பாம்பு பிடிப்பவர், அது தன்னை அவ்வளவு ஆக்ரோஷமாக துரத்தியும், வழக்கமாக இவ்வகை பாம்புகள் ...
Read More »இந்தியாவின் புதிய வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வசாரத், சில்ஹாஸ் மற்றும் பழங்குடியினர் பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும், மாநில ...
Read More »ரெலோவிலிருந்து விலகினார் சிவாஜிலிங்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் இன்று காலை நேரடியாக கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.
Read More »முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்குக் கேட்கின்றார்கள்!
ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச அணியினர் முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்கு கேட்கின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஜானாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை (1) வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று இல்லாதபொல்லாத பொய்களைச் சொல்லியும், அச்சமூட்டியும் கோத்தாவை வெல்ல வைக்க வாக்குக் கேட்டுத் திரிவதை காணமுடிகின்றது. ...
Read More »கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது இனவாதிகளிற்கு புத்துயிர்!
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவது 2015 இன்பின்னர் செயலற்று காணப்பட்ட தேசிய வாதிகளிற்கும் இனவாதிகளிற்கும் புத்துயுரை வழங்கியுள்ளது-.இந்த சக்திகள் தற்போது உரத்துக்குரல்; எழுப்புபவர்களாகவும் மிரட்டல் அச்சுறுத்தல் விடுப்பவர்களாகவும்மாறிவருகின்றனர் என காணமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகெடாவின் மனைவி சந்தியா எக்னலிகொட பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் தமிழில் – அ. ரஜீபன் 1கேள்வி- இலங்கையில் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்படுதல் குறித்தும் அதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எப்படி உங்களை இணைத்துக்கொண்டீர்கள் என்பது குறித்தும் தெரிவிக்க முடியுமா? பதில்- ...
Read More »தாய்லாந்து நாட்டில் “தாய்” மொழியில் உருவெடுத்த திருக்குறள்!
உலகப் பொதுமறையான திருக்குறளை தாய்லாந்து நாட்டு “தாய்” மொழியில் இன்று வெளியிடப்படுகிறது. தாய்லாந்தின் பேங்கொங் நகரில் ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி “தாய்” மொழியில் திருக்குறளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்னும் கலந்து கொள்கிறார். உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை தாய்லாந்து மொழியில் வைத்தியர் சுவிட் மொழிபெயர்த்துள்ளார். இவர் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள்!
இந்து கோயில்களுக்குள் பௌத்த துறவிகள் உடல் தகனம் செய்யாமல் இருக்க சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் எனத் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். நேற்று வவுனியாவில் காணாமல் போன உறவுகள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். நாங்கள் 986 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நேற்றைய தினம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எமது போராட்ட களத்திற்கு வந்திருந்தார்கள். தமிழ் மக்களை மீன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நாங்கள் கூறுகின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ...
Read More »சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்!
ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமை(2) முற்பகல் கல்முனையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரது கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது கருத்தில், 90% வீதம் காணி விடுவிக்கப்பட்டுள்ளது என கதைவிட்டுக்கொண்டிருக்க தேவை இல்லை.98 அரசியல் ...
Read More »ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் வெடித்தார்!
சிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொல்லி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு (01) வாழைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			