உலகப் பொதுமறையான திருக்குறளை தாய்லாந்து நாட்டு “தாய்” மொழியில் இன்று வெளியிடப்படுகிறது.

தாய்லாந்தின் பேங்கொங் நகரில் ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு  இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி “தாய்” மொழியில் திருக்குறளை வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மோடியுடன்  தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்னும் கலந்து கொள்கிறார். உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை தாய்லாந்து மொழியில் வைத்தியர் சுவிட் மொழிபெயர்த்துள்ளார்.

இவர் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.