புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய கட்சிகள் தற்போது பதிவு செய்யப்படவுள்ளன. தற்போது நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 70 கட்சிகள் கபணப்படுகின்றது. எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளது.
Read More »செய்திமுரசு
கிட்டு பப்பாசியை அ டுத்து புதிய மா இனம் ஒன்று அறிமுகம் !
புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி. பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேலதிகப்பணிப்பாளர் கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தப்பிப்பிழைத்திருக்கும் பல்லாண்டு தாவரங்களை இனங்கண்டு அவ்வாறு இனங்காணப்பட்ட தாய்த்தாவரங்களை குறிப்பிட்டு, அவற்றை நாற்றுக்கள் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக மாகாண விவசாயத்திணைக்களத்தினருடன் இணைந்து திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தினர் மாவட்ட செயலகத்தின் நிதியுதவியுடன் 2005,2006 ஆம் ஆண்டுகளில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். இவ் ஆய்வில் பலதரப்பட்ட மாங்கன்றுகளும், பலாக்கன்றுகளும் தாவரரீதியில் ஆராயப்பட்டு ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத்தீயினால் உலக முழுவதும் புகை பரவும் அபாயம் – நாசா
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயில் இருந்து வெளியாகும் புகை விரைவில் உலக முழுவதும் பரவி ; தேசதத்தை ஏற்படுத்தும் என நாசா தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரையில் பல மாதங்களாக ஆக்கிரமித்த பாரிய காட்டுத்தீயால், பசிபிக் சதுமுத்திரம் முழுவதும் புகையைத் தூண்டியுள்ளது. புத்தாண்டு தினத்தை அடுத்த தீப் பிழப்புகளினால் புகை தென் அமெரிக்காவைக் நோக்கி நகர்ந்து, வானத்தை மங்கலாக மாற்றி, ஜனவரி 8 ஆம் திகதிக்குள் பூமியைச் சுற்றி பாதி அளவே நகர்ந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த புகை உலகம் முழுவதும் நகர்ந்து செல்லும் என்று ...
Read More »அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்!
மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் அதிகாரிகளைத் ...
Read More »தேசிய புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்!
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
Read More »தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் அலைஸ் வேல்ஸ் அழுத்தம் ….!
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார மீள் எழுர்ச்சி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் ஜெனிவா தீர்மானத்தில் வெளிமட்ட அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளரும் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனருமான அலைஸ் வேல்ஸ்ஸிடம் வலியுறுத்தியுள்ளது தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் தாம் அழுத்தம் கொடுப்பதாக அலைஸ் வேல்ஸ் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார் சிறிலங்கா வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு ...
Read More »விமானங்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டன தகவலை வழங்கியது யார்?
ஜனவரி 8 ம் திகதி ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொள்வதற்கு எட்டு மணித்தியாலத்திற்கு முன்னரே தமக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தாங்கள் படையினரையும் இராணுவ தளபாடங்களையும் பாதுகாப்பான பதுங்கு குழிகளிற்குள் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்கியதாகவும் ; தாக்கப்பட்ட தளங்களை சேர்ந்த இரு ஈராக்கிய படையினர் ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் தாக்குதல் இடம்பெற்றவேளை வெளியே எந்த போர்விமானமோ அல்லது ஹெலிக்கொப்டரோ இருக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அமெரிக்க படையினருக்கு என்ன நேரத்தில் தாக்குதல் நடக்கும் என்பது கூட தெரிந்திருந்தது என ...
Read More »காட்டுத்தீ புகையால் காற்று மாசுபாடு: போட்டியின்போது நிலைகுலைந்த டென்னிஸ் வீராங்கனை!
மெல்போர்னில் காற்று மாசு காரணமாக மூச்சு திணறி டென்னிஸ் கோர்ட்டில் வீராங்கனை நிலைகுலைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் புதர்கள் தீப்பற்றி எரிந்தது. தற்போது அது காட்டுத்தீயாக மாறியுள்ளது. காட்டுத்தீயால் மெல்போர்ன் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்தாலும் தீயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா வீராங்கனை டேலிலா ஜகுபோவிச் சுவிட்சர்லாந்தின் ஸ்டெஃபானியை ...
Read More »ஹரி – மேகன் தம்பதியின் புதிய மாற்றத்திற்கு ராணி அனுமதி!
பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து ஹரி தனது மனைவியும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதற்கு ;மகாராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் இரண்டாவது மகனான ஹரிக்கும் அமெரிக்க நடிகையான மேகனுக்கும் ;2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அரசு குடும்ப நிகழ்வுகளில் இருந்து தள்ளி இருந்த ஹரி – மேகன் தம்பதி, பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தனர். தங்கள் தேவைக்காக பணிக்கு செல்வதாகவும் கூறினர். இது ...
Read More »பேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால், அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal