செய்திமுரசு

“காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…”!-சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்

” காட்டிக்கொடுத்தவனுகளே… இந்தா காச சப்புங்கடா…” – தாக்குதலுக்கு முன்னர் பணக்கட்டுக்களை வீசியெறிந்த சாய்ந்தமருது தற்கொலைதாரிகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் ! விசேட செய்தியாளர் சாய்ந்தமருதில் இருந்து… – ” அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா …இந்த காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்துக்கு வீடுகளுக்கு பண நோட்டுக்களை அள்ளி வீசியிருக்கின்றனர் தற்கொலைதாரிகள்… கடந்த 18 ஆம் திகதி இந்த வீட்டை வாடகைக்கு பெற்ற இருவர் ...

Read More »

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானின்  மனைவி – மகள் காயங்களுடன் மீட்பு!

இலங்கையில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின்  மனைவி மற்றும் மகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகம் சஹ்ரானின்  சகோதரி மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது, அம்பாறை சாய்ந்தமருது மோதலுக்கு பின்னரே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

Read More »

ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி ….!

ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்த விடுதியில் பெண்களுக்கு தான் முதல் முன்னுரிமை. பெண்களின் இருக்கைகள் நிறைந்த பிறகு, இடம் இருந்தால் மட்டும் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் ஆண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுக்கு கூடுதலாக 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆண்களிடம் இருந்து வசூலிக்கப்படும் இந்த கூடுதல் ...

Read More »

அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது!

எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும், எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டும் உள் நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பினூடாகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களை அடுத்து அமெரிக்க‍ அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுக்கு தெடர்ந்தும் ...

Read More »

மட்டக்களப்பில் தற்கொலை தாக்குதலுக்கான ஒத்திகை!

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் 8 இடங்களில் தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றன. குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியிருந்தது. இந்நிலையில் குறித்த தற்கொலைத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக காவல் துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கடந்த 18 ...

Read More »

அம்பாறையில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் கண்டுபிடிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்டும் 4 வீடுகள் முற்றுகையிடப்படுள்ளன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிளில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 119 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தோட்ட விடுதியிலிருந்து வோக்கிடோக்கி உட்பட பல உபகரணங்கள் மீட்பு!

மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டவிடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமானமுறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டப்பகுதிக்கு சொந்தமான விடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் மினசாரத்தின் ஊடாக பயன்படுத்துகின்ற உபகரணங்கள் சிலவற்றை நல்லதண்ணி காவல் துறையினர்  நேற்று இரவு மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நல்லதண்ணி காவல் துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நல்லதண்ணி பகுதியில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த நான்கு வோக்கிடோக்கிகளும் ஏனைய ...

Read More »

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்தார்!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்திருந்தார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் அவுஸ்திஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்’ என என்னால் உறுதிப்படுத்த முடியும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறினார். மேற்படி நபர் அவுஸ்திரேலிய மாணவர் மற்றும் பட்டதாரி விசாவை வைத்திருந்தார். அத்துடன் மனைவி மற்றும் பிள்ளையொன்றுக்கான விசாவை கொண்டிருந்தார். 2013 ஆம் ஆண்டில் அவுர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினர். அதன்பின் அந்நபர் ...

Read More »

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார். 1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு. இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டில் எந்தவொரு ...

Read More »

சாய்ந்தமருது பிரதேசம் “ஐ.எஸ்.“ இன் தலைமையகம்!

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக காவல் துறை  பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் முக்கிய பகுதியாக சாய்ந்தமருது வீடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் மற்றும் காணொளிகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று அதிகளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. வெடிப்பு பொருட்கள், டெட்டனேற்றர்கள், பறக்கும் ரோன் இயந்திரமும் இதில் அடங்கும் என இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் சுமித் ...

Read More »