தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும், நிர்ப்பந்தங்களாலும், அழுத்தங்களாலும், எமது மக்களின் நீதிக்கான பயணம் தடைப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் ...
Read More »செய்திமுரசு
பாதுகாப்புச் செயலரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்! -கலாநிதி சரத் விஜேசூரிய
சிறீலங்காப் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனவிடம் தான் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாநிதி சரத் விஜேசூரிய தெரிவித்தார். சிறீலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கு உதவிய சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய நீதிக்கான தேசிய அமைப்பின் ...
Read More »அவுஸ்திரேலியாவில் நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிநெறி
ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். வடக்கில்; நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள் நிலவுகின்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் உள்ளது. இதைக் கருத்திற் கொண்டு பயிற்சியில் யாழ் மாவட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இருந்து 8 பேரும் தென்இலங்கையில் இருந்து ...
Read More »குரங்கு சேட்டையால் ஏற்பட்ட கலவரம்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
லிபியாவில் குரங்கு ஒன்று செய்த சேட்டையால் 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் உள்ளது பழங்குடியினர் வசிக்கும் சபா என்ற நகர் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குரங்குக்கு சொந்தமான 3 பேர் சாலையில் சென்ற சிறுமிகள் மீது குரங்கை ஏவி விட்டுள்ளனர். சிறுமிகள் மீது ஏறிய குரங்கு, ஒருவரின் முகத்திரையை ...
Read More »மாவீரர் நாள் – 2016 – அவுஸ்ரேலியா
தமிழீழ தேசிய மாவீரர் நாள் -2016
Read More »கொழும்பிலும் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகமாநாடு
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை அமைப்பு கடந்த 24.09.2016 இல் “எழுகதமிழ்”என்ற நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து அதில் வடக்குகிழக்கு மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப்பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ஊர்வலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே. இப் பேரணியானது தென் பகுதியில் உள்ளகுறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் ...
Read More »அவுஸ்ரேலிய அணியில் அதிரடி மாற்றம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் மோசமான தோல்வி எதிரொலியால் அவுஸ்ரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் இரண்டு டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றியது. அவுஸ்ரேலிய மண்ணில் அந்த அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. பெர்த்தில் நடந்த முதல் ...
Read More »தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாடு!
தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 22ஆம் திகதி, இலங்கை மன்றக் கல்லூரியில் மாநாடொன்று நடாத்தப்படவுள்ளது. இம்மாநாடானது கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி நடாத்தப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணி தென்னிலங்கையில் ஏற்படுத்திய அதிருப்தியை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே நடாத்தப்படவுள்ளது என தமிழ் மக்கள் பேரவையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு கடந்த 24.09.2016 இல் ‘எழுக தமிழ்’ என்ற நிகழ்வொன்றை ...
Read More »அரசியமைப்பு பேரவை: ஜனவரியில் 3 நாட்கள் விவாதம்
அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள ஆறு உப-குழுக்களின் அறிக்கை நாடாளுமன்றத்தில், நேற்று சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அறிக்கைகளின் மீதான விவாதம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவின் கீழுள்ள உப-குழுக்களின் அறிக்கையை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...
Read More »எல்லைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு உறுதியாக உள்ளன- அவுஸ்ரேலியா
அண்மையில் அஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தத்தில் உறுதியாகியிருப்பதாக அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவுஸ்ரேலியா கடல் வழியாக வர முயற்சிப்பவர்களை எச்சரித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் படகுகளின் வருகையை நிறுத்துவதில் Operation Sovereign Borders இன் வெற்றியானது எங்கள் கடல் எல்லைகள் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு இப்போது உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்கு வர எத்தனிக்கும் எந்தவொரு படகும் இடைநிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதை அண்மையில் பலப்படுத்தப்பட்ட கடல்சார் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal