செய்திமுரசு

பாகிஸ்தானில் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும்! சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என காவல் துறையினர் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ...

Read More »

தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் தகவல்களை தெரியப்படுத்துக!

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பெற்றோரை இழந்துள்ள பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் காவல் துறை பிரிவிற்கு உரிய தகவல்களை தெரியப்படுத்துமாறு கோரப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன் கருதி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பொறுப்பானவர்கள் 011-2444444, 011- 2337041 , 011-2337039 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்புக் கொண்டு உரிய தகவல்களை வழங்க முடியும் ...

Read More »

வடகொரியாவுக்கு 70 நாடுகள் வலியுறுத்தல்!

அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளவில்லை. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ...

Read More »

தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன?

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களிற்கு பின்னர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின்  வீட்டிற்கு  வெளியே கூடிய சிலர் தங்கள் பகுதியை கண்காணிப்பதற்கான விழிப்புக்குழுவொன்றை ஏற்படுத்தினார்கள். தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தவர்கள்  மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம் அந்த வீட்டிற்குள்ளிருந்தவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டிருந்தனர். தங்கள் குடும்பத்தவர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதால் அவர்கள் தங்களிற்கு என்ன நடக்குமோ என்ற கவலையிலும் அச்சத்திலும் சிக்குண்டிருந்தனர். எனது சகோதரர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்டதால் மக்களின் முகத்தை பார்ப்பது கடினமாகவுள்ளது  என தற்கொலை குண்டுதாரியின் சகோதரியொருவர் ...

Read More »

மன்னார்,மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

மன்னார் மற்றும் மாந்தை மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர் வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு. மன்னார்,திருகேதீஸ்வரம்,மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின்  வழக்கு விசாரனைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மன்னார் நீதிமன்றத்தில் குறித்த இரு வழக்குகளும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இன்றைய தினம்  மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா   மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் ...

Read More »

சிறிலங்கா காவல் துறை விடுக்கும் அவசர வேண்டுகோள் !

வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள காவல் துறை  நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்கள் அதனை காவல் துறையிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ளகாவல் துறை நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறுகாவல் துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னர் அவை தொடர்பில் அருகில் உள்ள காவல் துறை நிலையத்தில் அறிவிக்குமாறு காவல் துறை ஊடகப் ...

Read More »

அவுஸ்திரேலிய நாணயத்தாளில் தவறாக அச்சிடப்பட்ட சொல் !

அவுஸ்திரேலியாவின் அனைத்து 50 டொலர் நாணயத்தாள்களிலும் ஒரு வார்த்தையொன்று தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் 50 டொலர் நாணயத்தாளில் ‘ரெஸ்பொன்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பொன்ஸிபில்டி’ (responsibilty) என்று அச்சிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் குறித்த நாணயத்தாள்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இத்தனை நாட்கள் யாரும் பிழையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஒருவர் அதிலிருக்கும் பிழையை கண்டறிந்துள்ளார். அத்துடன் குறித்த நபர் இன்ஸ்டகிராமில் அதனை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இது அவுஸ்திரேலிய ரிசர்வ் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், குறித்த நாணயத்தாளில் பிழை இருப்பது உண்மை தான் என ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. ...

Read More »

என் உயிர் இருக்கும் வரை இந்த பணியை தொடர்வேன்!-வைத்தியராக பணிபுரியும் பூடான் பிரதமர்

பூடான் நாட்டின்  பிரதமர் லோட்டே ஷெரிங்  சிறிதும் மன கசப்பின்றி வார இறுதியான சனிக்கிழமைகளில் வைத்தியராக பணிபுரிகிறார். 41 வயதாகும்  லோட்டே கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் திகதி, 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பூடான் நாட்டை ஆளும் இவர், ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். வங்காள தேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் லோட்டே மருத்துவ பயிற்சி பெற்றவர் ஆவார். தான் பயின்ற கல்வியும், பெற்ற பயிற்சியும் மக்களுக்கு உதவும் வண்ணம் இருக்க வேண்டும் ...

Read More »

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது – டிலான் பெரேரா

காவல் துறை  விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சகல துறைகளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது என்பதை தெரிவித்துள்ள போதிலும்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனைக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளார். இதனால் எந்த பயனையும் நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து ...

Read More »

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ !

சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம் வரை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பு, திடீரென்று இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் கொழும்பு , நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கான பொறுப்பை, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கிவரும் ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டு, உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களில் அபு உபைதா எனும் ஐ.எஸ். பெயருடைய  சஹரான் ஹஸ்மியும் அடங்குவதாக அறிவித்திருந்தது. ...

Read More »