காவல் துறை விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சகல துறைகளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது என்பதை தெரிவித்துள்ள போதிலும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனைக் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளார்.
இதனால் எந்த பயனையும் நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றார்.
ஜெனீவா தீர்மானமத்தை நிறைவேற்றப் போவதாகவும் தெரிவிக்கின்றார். காவல் துறை விஷேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட சகல துறைகளும் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமற்றது என்பதையே வழியுறுத்துகின்றது. எனினும் பிரதமர் ரணிலும், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இதனை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளனர் என அவர் இதன் போது தெரிவித்தார்.