மாகாணசபைத் தேர்தல்களையும், ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றுக்கொன்று அண்மித்த திகதிகளிலேயே நடத்த வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் ஒரு தேர்தலின் முடிவு மற்றைய தேர்தலின் முடிவில் தாக்கம் செலுத்தும் நிலையேற்படும் என்று பெப்ரல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் செலவீனங்களை வரையறுக்கும் சட்டங்கள் எவையும் இயற்றப்படாமை நியாயமான தேர்தல் நடைமுறையைப் பாதிக்கின்றது. எனவே தேர்தல்களின் போது மேற்கொள்ளப்படும் செலவுகள் தொடர்பில் வரையறைகளை ஏற்படுத்துவதற்குரிய சட்டமூலம் ஒன்றினைத் தயாரித்திருக்கின்றோம். இதனை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க ...
Read More »செய்திமுரசு
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி குறைவு: ஆஸ்திரேலியா பிரதமர் அதிருப்தி!
ஆஸ்திரேலிய நாட்டில் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதை அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ) ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் ...
Read More »ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் மன்னிப்பு கேட்டார்!
அண்மையில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொரிய எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் ராணுவ கூட்டுப்பயிற்சியை தொடங்கி நடத்தி வருகின்றன. இதனை கண்டிக்கும் வகையில் வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிரவைத்தது. இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறினார். இதனால் வடகொரியா-அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ...
Read More »ஆஸ்திரேலியாவில் பட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து!
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் பெரிய கத்தி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கிங் தெருவில் இன்று மர்ம நபர் ஒருவர், பொதுமக்களை குறிவைத்து கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்த நபரின் கையில் கத்தியைப் பார்த்ததும் சாலையோரம் நடந்து சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், யார்க் மற்றும் கிங் தெருவின் முனையில் உள்ள ஓட்டல் அருகே, கத்தியுடன் வந்த அந்த மர்மநபர், அங்கே ...
Read More »ஐ.நா சிறப்பு பிரதிநிதி சிறிலங்கா வருகை!
மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகின்றார். ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் அரச மற்றும் எதிர் தரப்பினர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
Read More »ஜனாதிபதி தேர்தலுக்கு முன் மாகாண சபை தேர்தலை நடத்தலாமா?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை முன்வைக்கப்பட்டிராத சந்தர்ப்பத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என வியாக்கியானம் தருமாறு கோரியே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார். அதன்படி ஜனாதிபதியின் குறித்த விண்ணப்பம் மீது எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது. அதன்படி உயர் நீதிமன்றின் தீர்ப்பானது, ...
Read More »தமிழ் மக்களின் உரிமைக்குரலாக செயற்பட்ட குமார் பொன்னம்பலம்!
அண்ணல் குமார் பொன்னம்பலம் என்னும் உரிமைக்குரல் எம்மிடமிருந்து பறிக்கப்படாமல் வாழ்ந்திருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவருக்கு 81 வயதாகும். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இதன் உச்சக் கட்டமாக இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளை இடித்து வலியுறுத்தியவர் அவர். திம்புக்கோட்பாடுகளையே தமிழர் தம் அடிப்படை அபிலாசைகளாக கொண்டிருந்தார். எந்த ஒரு சிங்கள தலைமையும் வடக்கு கிழக்கு எனும் ...
Read More »பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர்! மில்லியனராக மாறினார்!
அவுஸ்திரேலியாவில் பிச்சை எடுத்து தெருவில் உறங்கிய இளைஞர், 21 வயதிலே மில்லியனராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரி சாண்டர்ஸ் என்கிற 21 வயது இளைஞர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு சொந்தமானவராக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாழ்க்கையில் பலர் வெற்றிபெற விழித்திருந்து இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு மனஅழுத்தம் இருந்தால் நீங்கள் ஒரு தொழிலை நடத்த முடியாது அதிகாலை 3 மணி வரை உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்ப்பதை ...
Read More »ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்!
ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் திகதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்தும், தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் கடந்த மாத மத்தியில் மாஸ்கோ நகர மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சியினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ...
Read More »செஞ்சோலை நினைவுதூபி அமைப்பவர்களுக்கு விசாரணை!
சிறிலங்கா விமானபடையினரின் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தூபி ஒன்று வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.இந்த நினைவுத் தூபியில் கொல்லப்பட்ட மாணவிகளின் படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள புதுக்குடியிருப்பு காவல் துறை குறித்த பணிகளை முன்னெடுத்த சிலரை இன்று (11)காலை புதுக்குடியிருப்பு காவல் துறை நிலையம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் 54 பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர். அவர்களுடைய 13 ...
Read More »
Eelamurasu Australia Online News Portal