உலகளவில் கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், கடனுக்கான கொத்தடிமை உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தில் 2.9 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ‘Stacked Odds’ என்ற ஐ.நா.வின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Stacked Odds’ எனும் இந்த அறிக்கை ஐ.நா.வின் அங்க அமைப்புகளான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு, மற்றும் Walk Free ஆகிய அமைப்புகளின் கூட்டுழைப்பில் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், சராசரியாக 130 பெண்களில் ஒரு பெண் நவீன அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதாகவும் இவ்வாறான சிக்கியுள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலிய ...
Read More »செய்திமுரசு
கொரோனா வைரசுக்கான 2-வது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டோம் – அதிரவைக்கும் ரஷியா
கொரோனா வைரசுக்கு எதிராக 3-வது தடுப்பூசியையும் கூடிய விரைவில் உருவாக்கிவிடுவோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ ...
Read More »ரிட்மனுவை தாக்கல் செய்தார் ரிசாத்
முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தன்னை அதிகாரிகள் கைதுசெய்வதை தடுப்பதற்காக நீதிமன்றில் ரிட்மனுவை தாக்கல் செய்துள்ளார். ரிசாத்பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே ரிசாத் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு காவல் துறை குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பிலும், மன்னாரிலும் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு இடங்களிலும் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இதுவரையில் அவர் கைதாகவில்லை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More »தாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்களவருடன் முரண்பட்ட அரச அதிபர் நீக்கம்!
மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார். இதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்திருக்கும்போது அப்பகுதியில் சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், பாராளுமன்ற ...
Read More »தமிழர் நாகரிகத்தின் தொன்மை வெளியாவதைத் தடுக்க சதியா?
கீழடி அகழ்வாய்வு அறிக்கைகள் வெளியாவதில் காணப்படும் தாமதத்தைப் பார்க்கும்போது தமிழர் நாகரிகத்தின் தொன்மை தொல்லியல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுவதைத் தடுக்க சதித்திட்டம் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ”தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும் பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும் அவற்றின் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் ...
Read More »சீதுவ தங்கும் விடுதியில் 42 பேருக்கு கொரோனா
சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் 42 பேர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரி வித்துள்ளார். நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக கம்பஹா பிரதேசத்தில் 35பேர், மினு வங்கொட பிரதேசத்தில் 38பேர் , திவுலபிட்டிய பகுதியில் 34 பேர் ஆகியோர் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் 7 பேர் , கிரிதிவெல பகுதியில் 4 பேர் கொரோ னா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்படுவதால் ...
Read More »இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் உறவினர்
இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதால் பிரச்சினைகள் எழுந்தன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரை அழைத்து நான் விளக்கம் கோரினேன் எனஅவர் தெரிவித்துள்ளார். எனது ஆட்சிக்காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பபெறுகின்றன என இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவைக்கு அறிவித்ததுஎன சிறிசேன தெரிவித்துள்ளார். படையினரும் காவல் ...
Read More »நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே கொரோனாவை தடுக்கும் தீர்வாகாது
கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் ...
Read More »பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா இலங்கை
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்ப்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது. இந்து சமுத்திரப் ...
Read More »அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் சர்ச்சை
அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ்மாநில பிரதமர் கிளாடிஸ்பெரெஜெக்லியன் சீனாவுடன் தொடர்பை பேணும் அரசியல்வாதியொருவருடன் தனக்கு இரகசிய உறவு உள்ளதாக அறிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடனான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி பணம் சம்பாதித்தார் எனகுற்றம்சாட்டப்பட்டுள்ள என்ற அரசியல்வாதியுடன் இரகசிய தனிப்பட்ட உறவுஉள்ளது என நியுசவுத்வேல்ஸ் பிரதமர் ஊழல் குறித்த விசாரணைகளின் போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார். ஊழல் குறித்த நியுசவுத்வேல்ஸ் சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சாட்சியமளித்த பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எனது குடும்பத்தினருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ கூட தெரிவிக்காத ...
Read More »
Eelamurasu Australia Online News Portal