முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீன் தன்னை அதிகாரிகள் கைதுசெய்வதை தடுப்பதற்காக நீதிமன்றில் ரிட்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ரிசாத்பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே ரிசாத் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக ஆறு காவல் துறை குழுக்கள் அமைக்கப்பட்டு கொழும்பிலும், மன்னாரிலும் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு இடங்களிலும் அவர் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், இதுவரையில் அவர் கைதாகவில்லை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Eelamurasu Australia Online News Portal