ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் எனும் இடத்திலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அரியவகை கடல் உயிரினம் ஓன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது Final Fantasy எனும் video gameல் வரும் ஒரு உருவத்தை ஒத்ததாகக் கானப்படுகிறது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகில் அரிய கடல் உயிரினமான Glaucus Aflanticus எனும் இவ் உயிரினம் பொதுவாக Blue Dragon எனவும் அழைக்கபடுகின்றது. இவ் உயிரினம் தென் ஆபிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கடற்பரப்புகளில் இதற்கு முன்னரும் தோன்றியுள்ளது. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த Blue Dragonஐ தொடுவதை தவிர்த்துக்கொள்ளும்படி உயிரியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Read More »செய்திமுரசு
மெல்பேர்ண் மாவீரர்நாள் – 2015
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சரியாக மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய நிகழ்வில்தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திருமதி மனோறஞ்சினி நவரட்ணம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் கௌரிகரன் அவர்கள் ஏற்றி ...
Read More »விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை (பின்னனி தகவல்கள்)
விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளம்செழியனினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில் எதிரிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்ததுடன், மற்றுமொரு இராணுவம் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த வழக்கு இடம் பெற்றுவந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் எதிரிகள் நால்வருக்கும் தலா ...
Read More »வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை: முதலமைச்சர் ஆதங்கம்!
வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை. வடமாகாணத்தின் நிதியம், கொடைகள் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(03) மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்பொழுது அங்கு பேசிய அத்தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வடமாகாணம் விரைவில் மற்றைய ...
Read More »அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2015
பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 15 – 09 – 1987முதல் சாகும் வரையிலான உண்ணாநோன்பிருந்து 26 – 09 – 1987 அன்று, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின், 28-வது ஆண்டு நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” 26 – 09 – 2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரின் சென் ஜூட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருமதி தமயந்தி சுபாஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் ...
Read More »அரசுகளின் நீதி – நிலாந்தன்
அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால், அதேசமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே, மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலகப் பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில், மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் ...
Read More »சம்பந்தரின் இலக்கு? – யதீந்திரா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை மற்றும்இ கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை ஆகியன தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று செயலாற்றப் போகின்றார் என்று ஒரு சாராரும்இ அவரால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க முடியாதென்று இன்னொரு சாராரும்இ இல்லை – இன்றைய சூழலை சாதகமாக ...
Read More »With The Facts In Hand UN Must Establish An International Independent Judicial Process: 59 HR Professionals
Fifty nine human rights activists and human rights professionals around the world have called upon the United Nations Human Rights Council to establish an independent international judicial process to investigate and prosecute war crimes committed in Sri Lanka’s civil war. We publish below the statement in full; An open letter from a group of human rights professionals eminent citizens to member states ...
Read More »Chief Minister Wigneswaran rejects domestic investigation in new NPC resolution
Questioning the legal possibilities of conducting a credible investigation within the domestic sphere of the Sri Lankan Constitution and pointing out other hurdles within the SL State system, C.V. Wigneswaran, the Chief Minister of Northern Provincial Council (NPC) on Tuesday passed a resolution rejecting the domestic process being proposed by the USA and other powers. In ithe new resolution, the ...
Read More »தமிழரசுக் கட்சியின் செயல் நியாயமானதா….?
பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான நியமனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு- தோல்வியுற்ற துரைரட்ணசிங்கத்துக்கும், மற்றொன்று வன்னி மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பேருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள். இதனால், இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தமதாக்கிக் கொண்டு, ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அநீதி ...
Read More »