இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவிற்கு சென்றுள்ளார்.. சிறிலங்கா சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த சிறிலங்காவுக்கான விஜயமானது ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் முதலாவது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »செய்திமுரசு
கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.75 கோடி வழங்கும் முகநூல்!
கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1.75 கோடி நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான முகநூல் ( ஃபேஸ்புக்) அறிவித்துள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. நிதியுதவியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் (Community Resilience Fund for GOONJ ) எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்குகிறது. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக் தனது அம்சங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை உதவும் ...
Read More »ஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் – நடனமாடிய ரஷ்ய அதிபர்!
ரஷ்ய அதிபர் புதின், ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆஸ்திரிய பெண் வெளியுறவுத்துறை அமைச்சரான கரின் நெய்சலுக்கு, அந்நாட்டின் தலைநகர் கம்லிட்சில் திருமணம் நடைபெற்றது. நெய்சலின் அழைப்பை ஏற்று, அவரது திருமணத்தில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில் கரினுடன், புதின் ஒன்றாக நடனமாடியது அங்கிருந்தவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழத்தியது. அத்துடன் திருமண விருந்திலும் புதின் கலந்து கொண்டார். ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவிவரும் சமயத்தில் ஆஸ்திரிய பெண் அமைச்சருடன் புதின் ...
Read More »நிலைமாறுகால நீதியை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் இலங்கை குறித்த இரண்டு பிரேரணைகள் சமர்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான நிபுனரும் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விஷேட அறிக்கையிடும் ஐக்கிய நாடுகள் நிபுனரும் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தயாரித்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித ...
Read More »குழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்!
42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், “காரில் போதுமான இடம் இல்லை” என்பதால் ஏற்பட்ட தூண்டுதலால் சைக்கிளில் சென்றதாக கூறுகிறார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்தது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக ...
Read More »மகிந்த மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியார் என உயர்கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 19வது திருத்தம் முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த எவரும் இரண்டு தடவைகளிற்கு மேல்போட்டியிட முடியாது என 19வது திருத்தத்தின் ஏற்பாடுகள் தெரிவிக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில குழுக்கள் சில சட்ட வாதங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மீண்டும் போட்டியிட முடியும் என்ற கருத்தை உருவாக்க முயல்கின்றன, அரசமைப்பு அனுமதிக்காததால் சந்திரிகா ...
Read More »இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் நம்பினார்! -இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார் என முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் சிறுபான்மையின மக்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ள பிரவீன் தவார் இந்த கருத்தினை ஏசியன் ஏஜில் பதிவு செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் 57 நாடுகளிற்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ள போதிலும் இந்தியாவின் அயல்நாடுகளுடனான உறவு முன்னெர் எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமானதாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ்காந்தி இந்தியாவின் வெளிவிவகார ...
Read More »அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் (Mitchell Johnson) அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான மிட்செல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்பே ஓய்வு பெற்றாலும் தனியார் இருபதுக்கு இருபது லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது உபாதையினால் பாதிக்கப்பட்ட இவர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் பயிற்சியளிக்கும் அல்லது ஆலோசனைப் பொறுப்புகளில் பங்காற்றுவது பற்றி யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிட்செல் 313 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 153 ஒருநாள் ...
Read More »அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி மூலம் இவர்தான் உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார். மொடலாக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் சமீபத்தில், ring donut – ஐ மிகவும் கவர்ச்சியாக சாப்பிடும் காணொளி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி இவரை பின்தொடர்பவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். நான் பிளாஸ்டிக் பாட்டில் ...
Read More »தமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா?
சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் விவாதிப்பதே மேற்படி கூட்டத்தின் முக்கிய நோக்கம். பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கின்றனர். விக்கினேஸ்வரனையே தொடர்ந்தும் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கையாக இருந்திருக்கிறது. அவர்களைப் பொருத்தவரையில் விக்கினேஸ்வரன் ஒரு அணியாகவும் தமிழரசு கட்சி ஒரு அணியாகவும் போட்டியிட்டால், தமிழரசு கட்சி நிச்சயம் தோல்வியடையும். கூடவே ...
Read More »