ரஷ்ய அதிபர் புதின், ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆஸ்திரிய பெண் வெளியுறவுத்துறை அமைச்சரான கரின் நெய்சலுக்கு, அந்நாட்டின் தலைநகர் கம்லிட்சில் திருமணம் நடைபெற்றது. நெய்சலின் அழைப்பை ஏற்று, அவரது திருமணத்தில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில் கரினுடன், புதின் ஒன்றாக நடனமாடியது அங்கிருந்தவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழத்தியது.
அத்துடன் திருமண விருந்திலும் புதின் கலந்து கொண்டார். ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவிவரும் சமயத்தில் ஆஸ்திரிய பெண் அமைச்சருடன் புதின் நடனமாடியதை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் புதினின் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal

