அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜோன்சன் (Mitchell Johnson) அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான மிட்செல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்பே ஓய்வு பெற்றாலும் தனியார் இருபதுக்கு இருபது லீக் போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது உபாதையினால் பாதிக்கப்பட்ட இவர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பயிற்சியளிக்கும் அல்லது ஆலோசனைப் பொறுப்புகளில் பங்காற்றுவது பற்றி யோசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிட்செல் 313 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 153 ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் எ ன்பது குறிப்பிடத்தக்கது.